Yogananda: ராமகிருஷ்ணா மிஷனின் முதல் துணைத் தலைவர் யாேகானந்தரின் பிறந்த நாள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Yogananda: ராமகிருஷ்ணா மிஷனின் முதல் துணைத் தலைவர் யாேகானந்தரின் பிறந்த நாள்

Yogananda: ராமகிருஷ்ணா மிஷனின் முதல் துணைத் தலைவர் யாேகானந்தரின் பிறந்த நாள்

Manigandan K T HT Tamil
Mar 30, 2023 06:15 AM IST

Swami Yogananda: 37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். ஆனால், ராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது.

சுவாமி யோகானந்தா
சுவாமி யோகானந்தா

சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டு மே முதலாம் தேதி கல்கத்தாவில் பலராம் போஸ் வீட்டில் வைத்து ராமகிருஷ்ண மிஷனைத் துவக்கியபோது துணைத் தலைவராக இவரைத் தேர்ந்தெடுத்தார்.

அவர் சபர்னா ராய் சவுத்ரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். பழைய வங்காளத்தின் உயர்குடி குடும்பமாக இவரின் குடும்பம் இருந்தது.

37 வயது வரை மட்டுமே வாழ்ந்தார். ஆனால், ராமகிருஷ்ண மடத்தின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு அபரிமிதமாக இருந்தது.

ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பிறகு, சாரதா தேவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தார்.

பெங்கால் பிரெசிடன்சியில் (தற்போது மேற்கு வங்கம்) தக்ஷினேஸ்வர் என்ற கிராமத்தில் 1861-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி பிறந்தார். நவின் சந்திர செளதரிக்கு இவர் தான் முதல் மகன்.

யோகிந்திரநாத் சிறுவயதிலிருந்தே சிந்திக்கும் இயல்புடையவர். அவர் எளிமையானவராகவும் எந்த ஆடம்பரத்திற்கும் ஆசைப்படாதவராகவும் விளங்கினார்.

தியானத்திலும் வழிபாட்டிலும் அதிக நேரத்தை செலவிட்டார்.

17 வயதாக இருக்கும்போது ஆன்மிக குரு ராமகிருஷ்ணரை சந்தித்தார் யோகாநந்தா. அவரிடம் இருந்த ஆன்மிக தேடலை புரிந்து கொண்ட ராமகிருஷ்ணர், அவரை அவ்வப்போது சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

ஆனால், தனது மகன் கல்வியில் கவனம் செலுத்தாமல் இருப்பதை எண்ணி பெற்றோர் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து, வேலை தேடி கான்பூருக்கு பயணப்பட்டார். அங்கு அவருக்கு உறவினர் இருந்ததால் தங்குவதற்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது.

ஆனால், அவருக்கு வேலை கிடைக்கவில்லை. மாறாக, நேரம் முழுவதையும் சிந்திப்பதற்காக அவர் செலவிட்டார்.

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டால் பொறுப்புகள் வரும் என கருதி இவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணத்திற்கு பிறகு, ராமகிருஷ்ணரை மறுபடியும் சந்தித்தார் யோகானந்தா.

அதைத் தொடர்ந்து விவேகானந்தர் தலைமையில் துறவு பூண்டார்.

யோகானந்தர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். 1899-ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி அன்று காலமானார். ராமகிருஷ்ணா மற்றும் சாரதா தேவியின் நேரடி துறவு சீடர்களில் முதன்முதலில் மறைந்தவர் இவர் தான்.

Whats_app_banner