Kolam: ஏன் வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும்? பின்னணி கதை என்ன?-why everyone should not put kolam in home - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kolam: ஏன் வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும்? பின்னணி கதை என்ன?

Kolam: ஏன் வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும்? பின்னணி கதை என்ன?

Aarthi V HT Tamil
Sep 16, 2023 02:35 PM IST

வீட்டு வாசலில் எதற்காக கோலம் போட வேண்டும் என தெரிந்து கொள்ளலாம்.

கோலம்
கோலம்

கோலமிட்டு அலங்கரிக்கப்படும் வீட்டில், பிரகாசம், லட்சுமி கடாக்ஷம் பொங்கி வழிகிறது. பண்டிகை நாட்கள், திருமணங்களில் வீடுகளில் பெரிய கோலங்களும், மற்ற நாட்களில் சாதாரண கோலங்களும் போடப்படுகின்றன. குறிப்பாக மார்கழி மாதத்தில் பெரிய வண்ணக்கோலங்கள் போட்டு வாசல்கள் அலங்கரிக்கப்படுகின்றன. இதைத்தவிர தீபாவளி, பொங்கல், கார்த்திகை என பண்டிகைக்கு ஏற்றவாறு பண்டிகைகளை குறிக்கும் வகையிலும் கோலங்கள் போடப்படுகின்றன. அது அந்த பண்டிகைகளின் கொண்டாட்ங்களுள் ஒன்றாக உள்ளது.

வீட்டு வாசலில் கோலம் போட வசதியில்லாதவர்கள் பூஜையறையில் கோலம் போட்டு கொள்ளலாம். பொதுவாக பூஜையறையை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக்கூடாது. முந்தைய நாட்களே சுத்தம் செய்து கோலம்போட்டு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூஜை செய்து கொள்ளலாம். வாசலில் கோலம் என்பது தினமும் போடவேண்டும். எங்கு வேண்டுமானாலும் கோலம் போட வசதியிருந்தால், தினமும் பச்சரிசி மாவில் தான் போட வேண்டும். பண்டிகை காலங்களில் கோலம்போட பூக்கள், வண்ணப்பொடிகளை பயன்படுத்தலாம்.

கால் மிதிபடும் இடங்களில் நாம் தெய்வீக சின்னங்களான விளக்கு உள்ளிட்ட கோலங்கள் போடக்கூடாது. தெய்வ வடிவங்களிலும் கோலம் போடக்கூடாது. அவற்றை கால் மதிபடாத இடங்களில் நாம் போட்டு கொள்ளலாம்.

வீட்டில் மகாலட்சுமி கடாக்ஷத்தையும், நிரந்தர மகிழ்ச்சியையும், அமைதியையும், தர்மச்சிந்தனையை ஏற்படுத்தக்கூடியவை கோலங்கள். அமாவாசையன்று கோலம் போடக்கூடாது. இதை எல்லாம் கடைப்பிடித்தால் லட்சுமி தேவி வீட்டில் வந்து வாசம் செய்வார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்