Coconut Tree Vastu: தீராத பிரச்னைகளை தீர்த்து, செல்வ செழிப்பு தரும் தென்னை மரம்! எந்த திசைகளில் நட்டால் நன்மை?
வாஸ்து சாஸ்திரத்தின் படி தென்னை மரம் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக இருந்து வருகிறது. வீட்டின் எந்தெந்த திசைகளில் தென்னை மரம் நட்டால் என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்
உங்கள் வீட்டில் தென்னை மரம் உள்ளதா? இது சரியான திசையில் உள்ளதா? தென்னை மரம் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் முன் தென்னை மரம் இருப்பது லட்சுமி தேவியின் இருப்பைக் குறிக்கிறது. ஆனால் தென்னை மரம் சரியான இடத்தில் இல்லாவிட்டால் அது வீட்டின் நிதி நிலையை பாதிக்கும். தென்னை மரம் பற்றிய சில வாஸ்து குறிப்புகள் வீட்டில் நிதி செழிப்பை அதிகரிக்க உதவுகின்றன.
வாஸ்து சாஸ்திரத்தின் படி குடும்பத்தில் யாருக்காவது வேலை அல்லது வியாபாரம் சம்பந்தமான பிரச்னைகள் இருந்தால் தென்னை மரத்தின் இருப்பின் மூலம் அதை சரி செய்து விடலாம் உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தென்னை மரத்தை நட்டால் உங்கள் பொருளாதார நிலை மேம்படும்.
தென்னை மரம் வடக்கு திசையில் இருந்தால் வீட்டில் நீண்ட நாள்களாக இருந்து வரும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். தென்னை மரம் மிகவும் நல்ல பலன் தரும் என்பது ஐதீகம்.
அதேசமயம், தென்னை மரமானது வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசையில் இருந்தால் தென்னை மரம் வீட்டை விட உயரமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி தென்னை மரம் மகிழ்ச்சி மற்றும் செழிப்பின் சின்னமாக இருந்து வருகிறது. வீட்டின் தெற்கு அல்லது மேற்குப் பகுதியில் தென்னை மரத்தை நடுவது சிறப்பான பலனைத் தரும். இந்த திசைகளில் தென்னை மரங்களை நடுவது மிகவும் மங்களகரமானது என்று வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றார்கள். தென் மரத்தை நடும்போது உங்கள் வீட்டுக்குள் வரும் ளிச்சத்துக்கு எவ்வித இடையூறு ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும்.
தென்னை மரம் வெட்டுவது நல்லதா?
வாஸ்து சாஸ்திரத்தின்படி தென்னை மரத்தை வெட்டுவது நல்ல பலனைத் தராது. ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் கீழே விழுந்தால் அது வேறு விஷயம். ஆனால் தென்னை மரத்தை நீங்களே வெட்டுவது நல்லதல்ல.
டாபிக்ஸ்