பெண்களே! வெள்ளிக்கிழமையன்று இதைச் செய்யாதீர்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பெண்களே! வெள்ளிக்கிழமையன்று இதைச் செய்யாதீர்கள்

பெண்களே! வெள்ளிக்கிழமையன்று இதைச் செய்யாதீர்கள்

Suriyakumar Jayabalan HT Tamil
May 21, 2022 09:38 PM IST

வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் செய்யக் கூடாதது என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

<p>பெண்கள் செய்யக் கூடாதவை</p>
<p>பெண்கள் செய்யக் கூடாதவை</p>

ஏனென்றால் அந்தக் கிழமை அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் என்பது நம்பிக்கை. வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் சில காரியங்களைச் செய்யக்கூடாது. அது என்ன என்பது குறித்து இங்கே காண்போம்.

பெண்கள் செய்யக் கூடாதவை

வீட்டைச் சுத்தம் செய்யும் போது, குறிப்பாக இரவு நேரத்தில் குப்பைகளை வெளியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

பொதுவாகவே தீபங்களை வாயினால் ஊதி அணைக்கக் கூடாது, அதேபோல் மலர்களால் அணைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தங்களை ஈரத் தன்மையோடு வைத்துக் கொண்டு பூஜை அறைக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

தற்போது இந்த பொருட்கள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது இல்லை ஆனாலும் வழிமுறை உள்ளது என்பதால் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஆட்டுக்கல், உரல், அம்மி, வாசற்படி போன்ற இடங்களில் அமரக்கூடாது.

பொதுவாகவே கடன் வாங்குவது தவறு அதிலும், உப்பு, ஊசி, தயிர், பால் போன்றவற்றைக் கடன் வாங்கக் கூடாது இரவு நேரங்களில் இதைப் பிறருக்குக் கொடுக்கக் கூடாது.

பெரியவர்கள் கூறுவதுபோல வீட்டின் உள்பகுதியில் நகங்களை வெட்டக் கூடாது.

செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் முடி வெட்டக்கூடாது.

வெள்ளிக்கிழமை அன்று வீட்டை அசுத்தமாக வைத்திருக்கக்கூடாது.

குபேரனுக்கும், மகாலட்சுமிக்கும் வெள்ளிக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். எனவே பூஜையறையை அலங்கோலமாக வைத்திருக்கக் கூடாது.

வீட்டைக் கழுவினாலும், ஏதேனும் ஒரு பொருளை வெளியேறினாலும், இல்லத்தில் குடியிருக்கும் மகாலட்சுமி வெளியேறி விடுவார். எனவே இதனைத் தவிர்ப்பது நல்லது.

Whats_app_banner