தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Medicine Luck Rasis: டாக்டர் படிப்பு; ஏகபோக மரியாதை; கைநிறைய துட்டு; மருத்துவம் படிக்கும் யோகம் கொண்ட ராசிகள் யார் யார்?

Medicine Luck Rasis: டாக்டர் படிப்பு; ஏகபோக மரியாதை; கைநிறைய துட்டு; மருத்துவம் படிக்கும் யோகம் கொண்ட ராசிகள் யார் யார்?

Kalyani Pandiyan S HT Tamil
Apr 20, 2024 09:24 AM IST

ஹோட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவத்துறை, அரசியல் உள்ளிட்ட துறைகளில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால், உங்களுக்கு சனி பகவானின் அருள் கண்டிப்பாக வேண்டும்.

மருத்துவ படிப்புக்கான யோகம் பெறும் ராசிகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.
மருத்துவ படிப்புக்கான யோகம் பெறும் ராசிகள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

இது குறுத்து அவர் பேசும் போது, “ இதில், முதலிடம் பெறுவது மகர ராசிதான். உத்திராடம், அவிட்டம் திருவோணம் உள்ளிட்ட நட்சத்திரங்களைக் கொண்ட மகர ராசிக்கு, மருத்துவ படிப்பை படிப்பதற்கான யோகம் அதிகமாக இருக்கிறது. 

ஹோட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவத்துறை, அரசியல் உள்ளிட்ட துறைகளில் நீங்கள் சிறந்து விளங்க வேண்டும் என்றால், உங்களுக்கு சனி பகவானின் அருள் கண்டிப்பாக வேண்டும்.

அவிட்டம் 1 மற்றும் 2ம் பாதங்களை பெற்ற நட்சத்திரங்களுக்கு, மருத்துவத்துறையில் படிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

சனிபகவானும், செவ்வாயும் சுப கிரகங்களோடு தொடர்பு கொள்ளாமலோ அல்லது சனிபகவான் நீச்சமோ அல்லது வக்ரகதியை அடையாமலோ, நீங்கள்  மருத்துவராக மாற முடியாது. 

மேஷ ராசிக்காரர்களுக்கும் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு மிக அதிகமாக இருக்கும். அஸ்வினி, கிருத்திகை பரணி ஆகிய மூன்று நட்சத்திரங்களும் மேஷ ராசிக்குள் அடங்கும். இன்னும் சொல்லப்போனால், புகழ்பெறும் மருத்துவராகவும், அந்த ராசிக்காரர்கள் மாறுவார்கள். மேஷ ராசியில் சனி பகவான் நீச்சம் பெறுவார். 

சனிபகவான் எப்பொழுது தன்னுடைய சுயத் தன்மையை இழந்து, வக்ரகதியோ அல்லது நீச்சமோ அடைகிறாரோ, அங்கேயே அவர் அதீத சுப கிரகமாக மாறிவிடுகிறார். ஆகையால் அஸ்வினி மற்றும் கிருத்திகை ஆகிய நட்சத்திரங்களில் பிறக்கக்கூடிய ராசிக்காரர்களுக்கு மருத்துவப்படிப்பில் மிகப்பெரிய யோகமானது கிடைக்கும்.” என்று பேசினார். 

மகரராசிக்கான குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கிறது என்பது குறித்து பிரபல ஜோதிடரான சுபாஷ் பாலகிருஷ்ணன் ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது, “மகர ராசியைப் பொருத்தவரை, சடாரென்று சென்று ஒரு விஷயத்தை செய்ய மாட்டார்கள். நின்று, நிதானமாக ஆராய்ச்சி செய்த பின்னரே, செயலில் இறங்குவார்கள். அவர்களுக்கு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். கல்வி வழியில் அவர்களுக்கு சில சிக்கல்கள் ஏற்படும். அது புத்தி குறைபாட்டால் இருக்காது.

கல்வியில், அவர்களுக்கு பிடித்தமான படிப்பு கிடைத்திருக்காது, இல்லை பண விஷயத்தில் பிரச்சினை இருந்திருக்கும். இது போன்ற பிரச்சினைகளால், அவர்களுக்கு கல்வியில் சில சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

தற்போது பெரும்பான்மையான மகர ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையானது கஷ்டத்திலேயே சென்று இருக்கும். காரணம் என்னவென்றால், அவர்களுக்கு தற்போது ஏழரை சனியானது நடந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு அவர்களது மனப்புழுக்கத்தை கூட சொல்வதற்கு ஆள் இருக்காது. ஆனால் வரும் காலம் உங்களை ஜெயிக்க வைக்கும் காலமாக வருகிறது.

யாரெல்லாம் உங்களை அவமானப்படுத்தினார்களோ அவர்கள் முன்னால், உங்களது செயல்களின் வழியே நீங்கள் முன்னேறி செல்வீர்கள்.

இரண்டு வகையான எதிரிகள் இருக்கிறார்கள். ஒன்று, உங்களை எதிர்க்கிறேன் என்று சொல்லி எதிர்ப்பவர்கள். இன்னொன்று, பக்கத்திலேயே இருந்து, குழி பறித்து, முதுகில் குத்தும் எதிரிகள். இந்த காலகட்டத்தில் அவர்களுடைய அப்பட்டமான முகங்கள் உங்கள் கண்முன்னே வந்து நிற்கும்.

ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளை மட்டும் நீங்கள் கவனமாக தேர்ந்தெடுத்து பேச வேண்டும். அதில் மட்டும் கவனமாக இருந்து விட்டால், எதிரியை நீங்கள் ஜெயித்து விடலாம். ஐந்தாம் பாவத்தில் குரு வந்து, ஒன்பதாம் பார்வையாக, உங்களது ராசியை பார்க்கும் பொழுது, உங்களுக்கு எல்லா விதமான யோகமும் வந்து சேரும்.

உப ஜெயஸ்தானத்தில் இருக்கக்கூடிய ராகு உங்களுடைய நண்பர். குருவின் பார்வை மூன்றாம் இடத்தில் இருந்து, உங்களின் மீது விழும் பொழுது ராகு வேண்டியதை வேண்டியபடி தருவார்.

இந்த யோகத்தின் காரணமாக, நொந்து நொடிந்து,கீழே விழுந்து, இனி வாழ்க்கையே இல்லை என்று முடங்கிப் போன மகர ராசிக்காரர்கள் கூட, ஃபீனிக்ஸ் பறவையை போன்று எழுவார்கள்.

உங்களுடைய ராசிநாதன் மூலத்திரிகோணம் அடைந்திருக்கிறார். அவர் வக்ரவதி பெறும் பொழுது, இந்த ஆண்டில் நினைக்க முடியாத அளவுக்கு உங்களிடம் யோகம் வந்து சேரும்.” என்று பேசினார்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்