Weather Update: அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை… ஆனா சென்னையில’ - வானிலை நிலவரம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை… ஆனா சென்னையில’ - வானிலை நிலவரம்!

Weather Update: அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை… ஆனா சென்னையில’ - வானிலை நிலவரம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 28, 2024 07:55 AM IST

Weather Update: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. - வானிலை நிலவரம்!

Weather Update: அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை… ஆனா சென்னையில’ - வானிலை நிலவரம்!
Weather Update: அடுத்த 24 மணி நேரத்தில் இங்கெல்லாம் இடி, மின்னலுடன் கனமழை… ஆனா சென்னையில’ - வானிலை நிலவரம்!

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் ஆகஸ்ட் 2ம் தேதி வரை வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு!

தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றைய தினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 

தரைக்காற்று மணிக்கு, 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது

அடுத்த 24 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - சென்னையில் நிலவரம் எப்படி?

நாளை முதல் ஆக., 2- ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 18 செ.மீட்டருக்கு மேலும், பவானியில் 9 செ.மீட்டர் மழையும், விண்ட் வொர்த் எஸ்டேட், பார்வூட், குந்தா பாலம் பகுதிகளில் தலா 7 செ.மீ., மழையும் பதிவானது.

குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வரை வீச வாய்ப்பு 

மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.