Viruchigam Rasi luck: “விசாகத்தை பிடிங்க.. சாதகம் தரும் உத்திரம்.. விபத்து தரும் கேட்டை” - விருச்சிகம் ராசி பலன்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Viruchigam Rasi Luck: “விசாகத்தை பிடிங்க.. சாதகம் தரும் உத்திரம்.. விபத்து தரும் கேட்டை” - விருச்சிகம் ராசி பலன்!

Viruchigam Rasi luck: “விசாகத்தை பிடிங்க.. சாதகம் தரும் உத்திரம்.. விபத்து தரும் கேட்டை” - விருச்சிகம் ராசி பலன்!

Kalyani Pandiyan S HT Tamil
Published Aug 20, 2023 07:33 AM IST

விருச்சிக ராசிக்கு உரித்தான விசாகம் நட்சத்திரக்காரர்கள், எந்தெந்த நட்சத்திர நாட்களில் என்னென்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட விபரங்களை இங்கு பார்க்கலாம்!

விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கான பலன்கள்!
விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கான பலன்கள்!

இது போன்ற போட்டோக்கள்

விருச்சிக ராசிக்கு இரண்டாவது நட்சத்திரம் பணம் கொடுக்கும் நட்சத்திரமாக இருக்கும். விருச்சிக ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனுஷம் நட்சத்திரம் வரும் அன்றைய நாள், சப்போட்டா, வெண் பொங்கல் மற்றும் முக்கனிகள் உள்ளிட்டவற்றை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். இதை உணவாக எடுத்துக் கொண்டாலும் சரி, தானமாக கொடுத்தாலும் சரி உங்களுக்கு நன்மைகள் தேடி வரும்.

உங்களுக்கு செல்வம் செழிக்க வேண்டும் என்றால் வீட்டின் வெளியே ஒரு டேபிள் ஃபேன் வைத்து உட்கார்ந்து அதன் காற்றை அனுபவியுங்கள். இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்றால், உங்களது குறிக்கோளை  ஒரு அட்டையில் எழுதி அதன் மீது ஒட்டிக்கொள்ளுங்கள். இது வேகமாக உங்களது எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு சிக்னலாக அனுப்பும்.

உத்திராடம் நட்சத்திரம் அன்று நீங்கள் பலா பழத்தையும் கொழுக்கட்டைகளையும் நீங்கள் தானமாக கொடுக்க வேண்டும். அதனை நீங்கள் உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

உங்களது பதினெட்டாவது நட்சத்திரம் உங்களுக்கு பண பகை கொடுக்கும். 22 வது நட்சத்திரமானது உங்களை வதம் செய்து விடும்.

விசாகம் நட்சத்திரக்காரர்கள் அஸ்வினி,மூலம் நட்சத்திரம் வரும் நாட்களில் அவர்கள் நன்றாக இருப்பார்கள். பரணி,பூரம், பூராடம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உங்களுக்கு மந்தத்தன்மையை கொடுக்க வல்லதாக இருக்கிறது. 

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் . ரோகிணி, திருவோணம் மற்றும் அஸ்தம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உங்களை வதையோ வதை என்று வதைத்து விடும். அதேபோல மிருகசீரிஷம்,சித்திரை அவிட்டம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் உங்களுக்கு நன்றாக இருக்கும்.

புனர்பூசம், பூரட்டாதி, விசாகம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் ஜென்ம நட்சத்திரங்களாக இருக்கிறது. பூசம், பூரட்டாதி அனுஷம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பணத்தை கொடுக்கும். ஆயில்யம்,கேட்டை,ரேவதி நட்சத்திரங்கள் உங்களுக்கு விபத்தை கொடுத்து விடும். அதனால் அன்றைய நாளில் கவனம் தேவை!