Vinayaka Chaturthi : விநாயகர் சதுர்த்தி.. இந்த விரதங்கள் இருந்தால் வம்ச விருத்தி உண்டாகும்!
விநாயகரின் முக்கிய விரதங்களும் அவற்றை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகளும் இதில் காண்போம்.
விநாயகர் சதுர்த்தி தினமான இன்று முக்கிய விரதங்கள் குறித்து தெரிந்து கொள்வோம். அவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
குமாரசஷ்டி விரதம்
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை முதல் மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும் விரதமாகும். கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை திதி அன்று தொடங்கி மார்கழி பிறை சஷ்டி வரை 21 தினங்கள் விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த காலகட்டத்தில் 21 இலைகள் கொண்ட மஞ்சள் நூலை கையில் கட்டிக்கொள்ள வேண்டும். குழந்தை பாக்கியம், செல்வம், குடும்ப வளம் பெருக இந்த விரதம் இருப்பார்கள். 21 நாட்களிலும் ஒரு நாளைக்கு ஒன்றுவீதம் 21 பல காரங்கள் செய்து விநாயகருக்குப் படைத்து பூஜை செய்ய வேண்டும்.
துர்வாஷ்டமி விரதம்
புராட்டாசி மாத வளர்பிறையில் அஷ்டமி அன்று தொடங்கி, விநாயகரை 1 ஆண்டு காலம் அருகம்புல்லால் அர்ச்சித்து வருவது இந்த விரதத்தின் சிறப்பு ஆகும். இந்த வழிபாட்டால் உடல் வலிமை உண்டாகும்.
துர்வா கணபதி விரதம்
மாத வளர்பிறை சதுர்த்தி அன்று விநாயகரை வழிபடும் விரதம் இது. அன்றைய தினம் விநாயகப்பெருமானை அருகம்புல் ஆசனத்தில் அமர்த்தி வழிபாடு செய்வதன் மூலம் வம்ச விருத்தி உண்டாகும்.
சித்தி விநாயக விரதம்
புரட்டாசி மாதம் சதுர்த்தியில் அனுஷ்டிக்கப்படும் விரதம் இது.வளர்பிறை 14ம் திதியான சதுர்த்தசி திதியில் விரதம் இருப்பது இந்த விரதத்தின் சிறப்பாகும். இந்த சுக்லபட்ச சதுர்த்தியில் சந்திர தரிசனம் செய்யக் கூடாது.
ஓம் விக்னேஸ்வராய நம என்ற விநாயக மந்திரத்தை 108 முறை கூறி வழிபட வேண்டும். மாத இந்த நாளில் விநாயகரை வழிபட்டு வந்தால் எதிரிகள் விலகுவார்கள். பாண்டவர்களில் மூத்தவரான தருமரால் அனுஷ்டிக்கப்பட்ட விரதமாகும்.
செவ்வாய்க்கிழமை விரதம்
செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையிலேயே நீராடி, அருகில் இருக்கும் விநாயகப் பெருமான் கோயிலுக்கு சென்று வழிபடவேண்டும்.
ஆடி மாத முதல் செவ்வாய் தொடங்கி ஓராண்டு முழுவதும் வரும் செவ்வாய்க்கிழமையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும் விரதம் இது.பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை தொடங்கவேண்டும். இதனால் செவ்வாய்தோஷம் நீங்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்