Vijayalashmi Yogam: மேஷம் முதம் மீனம் வரை! வெற்றிகளை குவிக்கும் விஜயலட்சுமி யோகம் யாருக்கு?-vijaya lakshmi yogam enhancing education economic development intelligence and physical fitness - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vijayalashmi Yogam: மேஷம் முதம் மீனம் வரை! வெற்றிகளை குவிக்கும் விஜயலட்சுமி யோகம் யாருக்கு?

Vijayalashmi Yogam: மேஷம் முதம் மீனம் வரை! வெற்றிகளை குவிக்கும் விஜயலட்சுமி யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Sep 30, 2024 06:15 AM IST

Vijaya Lakshmi Yogam: லட்சுமி யோகங்களை பொறுத்தவரை புதன், சுக்கிரன் தொடர்பில் உண்டாகும். ஆனால் விஜய லட்சுமி யோகம் கிடைக்க செவ்வாய் பகவானின் தொடர்பு முக்கியம். விஜயம் என்பதற்கு வெற்றி என்பது பொருள் ஆகும்.

Vijayalashmi Yogam: மேஷம் முதம் மீனம் வரை! வெற்றிகளை குவிக்கும் விஜயலட்சுமி யோகம் யாருக்கு?
Vijayalashmi Yogam: மேஷம் முதம் மீனம் வரை! வெற்றிகளை குவிக்கும் விஜயலட்சுமி யோகம் யாருக்கு?

லட்சுமி யோகங்களை பொறுத்தவரை புதன், சுக்கிரன் தொடர்பில் உண்டாகும். ஆனால் விஜய லட்சுமி யோகம் கிடைக்க செவ்வாய் பகவானின் தொடர்பு முக்கியம். விஜயம் என்பதற்கு வெற்றி என்பது பொருள் ஆகும். 

விஜய லட்சுமி யோகம் எப்படி உண்டாகின்றது?

உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம், மற்றும் திக்பலம் என்ற மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றை அடைய வேண்டும். மேஷம் மற்றும் விருச்சிகம் ராசியில் செவ்வாய் ஆட்சியும், மகரத்தில் உச்சமும், 10ஆம் இடத்தில் திக்பலமும் பெறுவார்கள். 

இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் செவ்வாய் உடன் ராகு சேர்க்கை ஏற்பட்ட வேண்டும். இந்த இணைப்பை குரு பகவான் பார்க்கும் போது விஜய லட்சுமி யோகம் உண்டாகின்றது. 

உதாரணமாக மேஷத்தில் செவ்வாய்-ராகு சேர்க்கை ஏற்பட்டு, தனுசு, துலாம், சிம்மம் ஆகிய மூன்று ராசிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து குரு பகவான் பார்த்தால் விஜயலட்சுமி யோகம் உண்டாகும். 

மகரம் ராசியில் செவ்வாய்-ராகு இணைவு ஏற்பட்டு, கடகம், கன்னி, மிதுனம் ராசியில் இருந்து குரு பார்க்கும் போதும் விஜய லட்சுமி யோகம் உண்டாகும். 

விஜயலட்சுமி யோகம் தரும் நன்மைகள் 

விஜயலட்சுமி யோகம் ஆனது உடல் பராக்கிரமத்தை கொடுக்கும். எப்பேர்ப்பட்ட சூழலையும் சமாளிக்கும் நுண் அறிவை ஜாதகருக்கு கொடுக்கும். எப்போதும் முன்னோக்கி செல்லும் வேகம் மற்றும் உத்வேகத்துடன் ஜாதகர் இருப்பார். பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு மத்திம வயதை எட்டிப்பிடிப்பதற்குள் ஜாதகர் புகழ் அடைவார். இவர்கள் கலை, விளையாட்டு, விஞ்ஞானம், அரசியல் துறைகளில் சாதனைகளை படைப்பார்கள். தங்கள் முயற்சியினால் இவர்கள் உயரங்களை எட்டிப்பிடிப்பார்கள். 

தைரிய, வீரிய செயல்திறன் 

இவர்களுக்கு தைரியம் வீரிய செயல்திறன் கூடுதலாக இருக்கும். எப்போது எதை சாதித்துக் கொள்வது என்ற சாமர்த்தியம் இவர்களுக்கு உண்டு.  மிதுன லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் செவ்வாய் உச்சம் ஆக ராகு இணைந்து, ரிஷபத்தில் 12 ஆம் இடத்தில் அமர்ந்தபடி குரு பார்க்கும் போது ஜாதகர் பொறியியல் படிப்பில் சிறந்து விளங்குவார். கல்வி மேன்மை, பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம், துணிச்சல் மிக்க செயல்திறன், மன ஆரோக்கியம் போன்றவற்றை இந்த யோகம்  உண்டாக்குகின்றது. 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner