உங்கள் வீட்டில் பணம் கொட்ட கண்ணாடிகளை வைக்க வேண்டிய இடங்கள்! வாஸ்து டிப்ஸ்!
வீட்டில் கண்ணாடிகளை நிறுவுவதற்கும் அவற்றை சிறப்பு இடங்களில் வைப்பதற்கும் பல வாஸ்து பரிந்துரைகள் உள்ளன. வாஸ்து படி கண்ணாடியை நிறுவுவது என்பது வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகின்றது.
Vasthu Tips: சனாதன தர்மத்தில் வாஸ்துவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டிற்கு நேர்மறை ஆற்றலைக் கொண்டு வந்து வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதியை உண்டாக்கும் என்பது ஐதீகம்.
வீட்டில் கண்ணாடிகளை நிறுவுவதற்கும் அவற்றை சிறப்பு இடங்களில் வைப்பதற்கும் பல வாஸ்து பரிந்துரைகள் உள்ளன. வாஸ்து படி கண்ணாடியை நிறுவுவது என்பது வாழ்க்கையில் மகிழ்ச்சி, செழிப்பு, செல்வங்களை கொண்டு வரும் என்று நம்பப்படுகின்றது.
கண்ணாடி தொடர்பான வாஸ்து குறிப்புகள்-
வீட்டில் லாக்கரில் கண்ணாடி வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. அதே சமயம் வீட்டில் மருந்து பொருட்கள் வைக்கும் இடங்களில் கண்ணாடி வைப்பது உடல்நல பிரச்னைகளை கொண்டு வரும்.
பூஜை அறைகளில் வைக்கப்படும் கண்ணாடியால் வீட்டில் மங்களமும், ஐஸ்வரியமும் அதிகரிக்கும். பெண்கள் தங்கள் பணப்பையில் கண்ணாடியை வைத்துக் கொள்ளலாம். பணவரவை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அதே சமயம் மகள்கள் கணவன் வீட்டுக்கு செல்லும் காலத்தில் கண்ணாடிகளை பரிசாக கொடுப்பது நல்லது அல்ல.
வாஸ்து விதிகள்
வாஸ்துவில், வீட்டின் கிழக்கு அல்லது தெற்கு திசையில் கண்ணாடியை வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதனால் பண வரவு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அழுக்கு நிறைந்த மற்றும் உடைந்த அல்லது ஒளி இழந்த கண்ணாடிகளை பயன்படுத்தக்கூடாது. இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்னைகளும் சிக்கல்களும் உருவாகும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படும்.
சமையலறை மற்றும் வீட்டின் மேற்கு அல்லது தெற்கு சுவரில் கண்ணாடியை நிறுவக்கூடாது. இது வீட்டில் பிரச்சனைகள் மற்றும் வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கலாம்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.