Vastu Tips: மாலை நேரத்தில் இதை மட்டும் செய்யதீர்கள்! லட்சுமி தேவி அருள் கிடைக்காமல் போகலாம்
சில விஷயங்களை மாலையில் செய்வது அபசகுனமாக கருதப்படுகிறது. மாலை நேரத்தில், சூரியன் அஸ்தமித்த பிறகு செய்யக்கூடாத வேலைகள் பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. எனவே லை நேரத்தில் இதை மட்டும் செய்யதீர்கள். இல்லாவிட்டால் லட்சுமி தேவி அருள் கிடைக்காமல் போகலாம்
நாம் செய்யும் ஒவ்வொரு அன்றாட வேலைகளுக்கும் நேரம் காலமானது முக்கியமானதாக உள்ளது. இதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் முறையான விளக்கங்களும் கூறப்பட்டுள்ளது.
வீடு கட்டுவது முதல் வீட்டுக்கு வாங்கிய பொருள்களை சரியான இடங்களில் வைப்பது வரை அனைத்தையும் வாஸ்து முறைப்படி கண்டிப்பாக செய்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட பலரும் இதை முறையாக பின்பற்றுவார்கள். இதனால் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியுடன் இருப்பதாக நம்புகிறார்கள்.
வீட்டுக்குள் எந்தெந்த பொருள்களை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்ற விதிகளை வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதேபோல் நாம் செய்யும் அன்றாட வேலைகளிலும் பின்பற்ற வேண்டிய காலம், நேரம் குறித்து வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது
சில நேரங்களில் சில விஷயங்களை செய்வது துரதிர்ஷ்டத்துக்கு வழிவகுக்கிறது. அதேபோல மாலை நேரத்தில் சில காரியங்களைச் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறு செய்வதால் அது அபசகுனமாக கருதப்படுகிறது. அந்த வகையில் மாலை நேரத்தில் செய்யக்கூடாத விஷயங்களாக வாஸ்துவில் கூறப்படுவதை பார்க்கலாம்
பெண்களை துன்புறுத்துவது கூடா
பெண்களை எப்போது துன்புறுத்துவதும், அவமானப்படுத்துவதும், மனதை காயப்படுத்துவதும் தவறான விஷயம். அதிலும் குறிப்பாக ஒரு பெண்னை மாலையில் துன்புறுத்தப்படக்கூடாது.
சூரியன் மறைந்தவுடன் இருள் ஒளிர தொடங்கும். தீபம் ஏற்றுவதற்கு உகந்ததாக இருக்கும் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்ணின் மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் குடும்பத்தில், அந்த வீட்டில் எதிர்மறை தலைதூக்கும் என கூறப்படுகிறது.
மாலை நேரத்தில் வீட்டில் மட்டுமல்ல அலுவலகம் உட்பட எந்த இடத்திலும் பெண்களை துன்புறுத்துவதும், திட்டுவதும் நல்லதல்ல. அவ்வாறு செய்தால் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காமல் போகலாம்
குப்பைகளை துடைக்க வேண்டாம்
சில வீடுகளில் மாலையில் துடைப்பம் வைத்து சுத்தம் செய்யும் வழக்கம் உண்டு. மாலை நேரத்தில் வீட்டை சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்துவது நல்லதல்ல. வீட்டை சுத்தம் செய்ய இது சரியான நேரம் அல்ல என்று கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் துடைப்பம் பிடித்தால் வீட்டில் செய்ய வேண்டிய சுப காரியங்கள் தாமதமாகும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். வீட்டு வாசலில் லட்சுமி தேவி நுழையமாட்டார் எனவும் கூறப்படுகிறது
மாலையில் நேரத்தில் தூங்குவது நல்லதல்ல
சிலருக்கு மாலையில் தூங்கும் பழக்கம் இருக்கிறது. வீட்டில் பெரியவர்கள் இருந்தால் மாலையில் தூங்கக்கூடாது என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கு பல காரணங்கள் உள்ளன.
சிலர் நோய் காரணமாக மாலையில் தூங்குவார்கள். இருப்பினும், மாலையில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், மாலையில் தூங்கினால் துர்திர்ஷ்டம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இதற்குக் காரணம் உண்டு. லட்சுமி தேவி மகிழ்ச்சியாக நேரம் இது என்பதால், இந்த நேரத்தில் தூங்ககூடாது.
துளசி செடியை தொடவோ, தண்ணீர் பாய்ச்சவோ கூடாது
மதியத்துக்கு பிறகு துளசி செடியை தொடக்கூடாது. துளசி இலையை கிள்ளவும் கூடாது என்று பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் துளசி செடிக்கு மாலையில் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. இவ்வாறு செய்தால் லட்சுமி தேவி வீட்டை விட்டு வெளியேறுவாள். அதன்பிறகு, எவ்வளவு முயன்றாலும் லட்சுமி தேவியின் அருளை பெற முடியாது என்பது ஐதீகம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்