Varalakshmi Viratham : வரலட்சுமி விரதம் இருக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும்.. எந்த உணவுகளை சாப்பிடலாம் பாருங்க!
Varalakshmi Viratham : இந்து மதத்தில் கணவன் மனைவி உறவு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லட்சுமியை வணங்கி பெண்கள் விரதம் இருக்கின்றனர். சுமங்கலி பெண்கள் கணவன் நீண்ட ஆயுளுடன் குறை இல்லாமல் செல்வாக்கோடு வாழ வேண்டும் என வரலட்சுமி விரதம் இருக்கின்றனர்.
Varalakshmi Viratham : திருமணமான சுமங்கலி பெண்கள் மற்றும் கன்னி பெண்கள் பொதுவாக சுமங்கலி பூஜையில் ஈடுபடுகின்றனர். சுமங்கலி பெண்கள் தங்களின் கணவன் நீண்ட ஆயுளுடன் குறை இல்லாமல் செல்வாக்கோடு வாழ வேண்டும். அதேபோல் தொழில் சிறக்க வேண்டும். குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பத்தை அனுபவிக்க வேண்டும் என எல்லா வரத்தையும் தர வேண்டும் என்று பெண்கள் வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கின்றனர்.
இந்து மதத்தில் ஒவ்வொரு கணவன் மனைவி உறவு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் நல்ல கணவன் அமைய வேண்டும் என லட்சுமியை வணங்கி பெண்கள் விரதம் இருக்கின்றனர்.
வரலட்சுமி விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியவை
வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் முதல் நாளன்று வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். அரிசி மாவில் கோலம் போட்டு மாவிலை தோரணகளை கட்ட வேண்டும். வீட்டின் தென்கிழக்கு மூலையில் ஒரு இடத்தில் சாணம் தெளித்து, அதன் மீது மரத்தால் ஆன பலகையை வைக்க வேண்டும். அந்த மரப்பலகையில் அரிசி மாவில் கோலம் போட்டு வெள்ளி தாம்பாலம் அல்லது பித்தளை தட்டு அல்லது வாழை இலை வைக்க வேண்டும். அதன் மீது மகாலட்சுமியை வணங்கி மூன்று கைப்பிடி அளவு பச்சரிசி அல்லது நெல்லை பரப்ப வேண்டும்.
பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, நாணயங்கள், தங்கம் அல்லது வெள்ளி காசு , ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு எலுமிச்சை பழம், கருகமணி இவைகளை உள்ள போட வேண்டும். வாசனை பொருட்களும் போடலாம். இந்த கலசத்தின் வாய்பகுதியில் மாவிலை வைத்து அதன் மீது மஞ்சள் குங்குமம் பூசிய தேங்காய் வைக்க வேண்டும். அம்மன் திரு முகத்தை வைக்க வேண்டும். அம்மன் முகத்தை சந்தனத்தால் செய்தோ அல்லது வெள்ளி முகம் வைத்தோ வழிபடலாம். அம்மனுக்கு கலசத்தின் மீது புதிதாக வாங்கிய மஞ்சள் அல்லது சிகப்பு நிற பட்டாடை கட்டவும். அல்லது புதிய புடவை, ஜாக்கெட் துணியை கட்டலாம். அம்மனை அவர் அவர் வசதிக்கேற்ப அலங்காரம் செய்யலாம்.
வாசலுக்கு அருகில் அம்மனை (15 - 08 - 2024) வியாழக்கிழமை இரவே வைத்து விட வேண்டும் மறுநாள் (16 - 08 - 2024) வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் அன்று அதிகாலையில் குளித்து விட்டு வாசல் தெளித்து கோலமிட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
லட்சுமி அம்மனை அழைத்து வந்து வீட்டில் கிழக்கு திசையில் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது வடக்கு திரை நோக்கி அமர்ந்து கும்ப பூஜைக்கு பின் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும்.
படையல்
வரலட்சுமி நோம்பின் போது அன்னைக்கு பல வகை சாதம், பாயசம், வடை, கொழுக்கட்டை, தயிர், பசும்பால், நெய், தேன் போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
நோன்பு கயிறு
நோன்பு மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜை செய்ய வேண்டும். மலர்களால், தீபங்களால் அம்பாளை ஆராதனை செய்து 9 இழைகள் கொண்ட மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் கணவரிடம் கொடுத்தோ அல்லது மூத்த சுமங்கலிகளை கட்டி விடச் சொல்லி, சரடை கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்களுக்கும் நோன்புக்கயிறு கொடுக்க வேண்டும். உங்கள் அக்கம் பக்கத்து வீட்டு சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து அம்மனை வணங்கி உங்களால் இயன்ற உணவு கொடுத்து வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ, சட்டை துணி, இனிப்பு, பழம் ஆகிய பொருட்களை தாம்பூலமாக கொடுக்கலாம். இப்படி சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுப்பதால் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் மகாலஷ்மியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பூஜை செய்த அன்று மாலை பூஜைக்கு பயன்படுத்திய தேங்காய், பச்சரிசி வைத்து விட்டு கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலை எளிமையான பூஜை செய்து விட்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
முதல் நாள் வரலட்சுமி விரதத்திற்குகாக சந்தனத்தால் செய்யப்பட்ட அம்மனின் சிலையை மறுநாள் நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.
அடுத்த வெள்ளியன்று பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம். இவ்வாறு செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும்.
வரலட்சுமி பூஜை செய்ய சிறந்த நேரம்:
வெள்ளிக் கிழமையில் பொதுவாக காலை 9.15 - 10.15 வரையிலும், மாலை 4.45 முதல் 5.45 வரை நல்ல நேரமாக உள்ளது. இந்த நேரத்திலேயே வரலட்சுமி பூஜை செய்யலாம். இல்லை என்றால் மாலையில் வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்யலாம்.
விரதம் இருக்கும் பெண்கள் பால், வாழைப்பழம், நட்ஸ், ஜூஸ்கள் போன்றவற்றை சாப்பிடலாம்.
குறிப்பு
பூஜையின் போது தங்கம் அல்லது வெள்ளி காசுகளை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கட்டாம் இல்லை. நம்மால் இயன்ற ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம். அதேபோல் பூஜையின் போது எவர் சில்வர் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்