நோய்களைத் தீர்க்கும் வைத்தியநாதர் கோயில்
தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் வைத்தியநாதர் கோயில் குறித்து இங்கே காண்போம்.
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ளது இந்த வைத்தியநாதர் திருத்தலம். பறவையாகிய ஜடாயு, ரிக்வேதம், முருகப்பெருமான், சூரியன் ஆகியோர் வழிபட்டு நலம் அடைந்த திருத்தலம் இது.
நவக்கிரக மூர்த்திகளை ஒருவரான செவ்வாய் தன்னுடைய நோய் நீங்க இங்கு வழிபட்டு குணம் அடைந்தார். அதனால் செவ்வாய்க்குரிய சிறப்புத் தலமாகவும் இது விளங்குகிறது. ஐந்து ஆதாரங்களையும், ஏழு நிலைகளைக் கொண்டு உயர்ந்து நிற்கும் கம்பீரமான ராஜகோபுரத்துடன் விளங்குகிறது இந்த ஆலயம்.
மனித உடலைப் பிடிக்கின்ற சகல விதமான நோய்களுக்கும் மட்டுமன்றி பிறவிக்குக் காரணமான வினை என்னும் நோய்களையும் போக்கும் மருத்துவராக இங்கே கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீ வைத்தியநாதர்.
சித்தாமிர்த தீர்த்தம் என்ற திருக்குளம் இங்கு உள்ளது இது மிகவும் சிறப்பானது. அம்பிகை சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுவதால் தீராத வினை அகலும் என்கிறது தலபுராணம்.
இந்த தலத்தின் நம்பிக்கையான தையல் நாயகி தைல பாத்திரம், அமிர்த சஞ்சீவி, வில்வ மரத்தடியில் மண் ஆகியவற்றைக் கொண்டு வர இவற்றைக் கொண்ட தன்னை வேண்டிப் பணியும் பக்தர்களின் 4,448 விதமான நோய்களையும் குணப்படுத்த வைத்தியநாத சிவபெருமான்.
இந்தக் கோயிலின் மூலவர் வைத்தீஸ்வரர் என்று கூறப்படும் ஸ்ரீ வைத்தியநாதர். இந்த வைத்தீஸ்வரரின் நாயகிதான் அன்னை தையல் நாயகி. இந்த ஆலயத்தின் இன்னொரு முக்கிய மூர்த்தி அங்காரகன் எனப்படும் செவ்வாய் இந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது ஆகும்.