Vagra Sani Peyarchi Palangal 2024: மேஷம் முதல் மீனம் வரை! வக்ர சனி காலத்தில் வளம் பெற போகும் ராசி எது?-vagra sani peyarchi palangal mesham to meena which zodiac sign will get prosperity during vakra sani period - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vagra Sani Peyarchi Palangal 2024: மேஷம் முதல் மீனம் வரை! வக்ர சனி காலத்தில் வளம் பெற போகும் ராசி எது?

Vagra Sani Peyarchi Palangal 2024: மேஷம் முதல் மீனம் வரை! வக்ர சனி காலத்தில் வளம் பெற போகும் ராசி எது?

Kathiravan V HT Tamil
Aug 04, 2024 04:26 PM IST

Vagra Sani Peyarchi Palangal: கடந்த ஜூன் 19ஆம் தேதி கும்பம் ராசியிலேயே வக்ரம் பெற்ற நிலையில் சனி பகவான் உள்ளார். வக்ர சனி தொடங்கி உள்ள நிலையில் நவம்பர் 4ஆம் தேதி வரை சனி பகவான் வக்ர நிலையில் இருப்பார்.

Vagra Sani Peyarchi Palangal: மேஷம் முதல் மீனம் வரை! வக்ர சனி காலத்தில் வளம் பெற போகும் ராசி எது?
Vagra Sani Peyarchi Palangal: மேஷம் முதல் மீனம் வரை! வக்ர சனி காலத்தில் வளம் பெற போகும் ராசி எது?

மேஷம்

மேஷம் ராசியை பொறுத்தவரை தொழில் மாற்றம், எதிர்பார்க்கத நல்ல விஷயங்கள், பதவி உயர்வு, பயணங்கள் மூலம் இன்பம், உத்யோகத்தில் ஏற்றம் காணப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். கடன்கள் தீரும். 

ரிஷபம்

குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் பொறுப்புகள் கிடைத்தல், சுபகாரியங்கள் நடைபெறுவது, கடல் கடந்து தொழில் தொடங்குவதல். சொத்து சேர்க்கை, பிரிந்த குடும்பம் ஒன்று சேர்வது உள்ளிட்டவை உண்டாகும்.  

மிதுனம்

தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை, வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை, தாய்வழி மற்றும் தந்தை வழி உறவுகள் ஏற்றம் பெறும். இரத்த பந்த உறவுகள் உதவி செய்வார்கள். 

கடகம்

கடகம் ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம். சாதாரண சண்டை கூட குடும்பத்தை பிரித்துவிடலாம் என்பதால் கவனம் தேவை. உடல் நலனில் கவனமாக இருங்கள். குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. 

சிம்மம்

வெற்றிகள் குவியும், பெரிய பொறுப்புகள் ஏற்படும், பயணங்கள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு, உத்யோகம் மேம்படும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எதிரிகள் விலகுவார்கள். 

கன்னி

குடும்பத்தை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்கு தொந்தரவு உண்டாகலாம். பிள்ளைகளின் படிப்பு மேம்படும். தொழில் சார்ந்த முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் 

தாய்வழி, தந்தை வழி உறவுகள் மேன்மை பெறும், பயணங்கள் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். உத்யோகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். பூமி தொடர்பான சிக்கல்கள் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலை ஏற்படும். மன கஷ்டம் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். 

விருச்சிகம்

தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். மன சஞ்சலம் நீங்கும். திருமண தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். நிலம், வீடு தொடர்பான விவகாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். பங்குச்சந்தை மூலம் லாபம் கிடைக்கும். 

தனுசு 

முன்னேற்றத்திற்கு உண்டான அற்புதமான காலம் ஆகும். வார்த்தைகளில் கோபம் வேண்டாம். மென்மையான வார்த்தைகளை பேசுவதன் மூலம் நன்மைகள் கிடைக்கும். தொழிலில் அற்புதங்கள் நிகழும். தொழில், வியாபாரம், கல்வி, உத்யோகங்களில் இப்ப்வர்களுக்கு நன்மைகள் கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். உடலில் இருந்த பிரச்னைகள் தீரும். 

மகரம் 

வக்ர சனி காலத்தில் மிகவும் ஜாக்ரதையாக இருக்க கூடிய ராசிக்காரகள் மகரம் ராசிக்காரர்கள் ஆவார்கள். ஆவணி மாதத்தில் தேவை இல்லாத குழப்பம் ஏற்படும். கோபம் கூடாது. வண்டி வாகனங்களில் பழுதை சரி செய்து ஓட வேண்டும். வண்டி வாகனங்களில் சாகசங்கள் செய்ய கூடாது. மேலதிகாரிகளை பற்றி பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். 

அரசுத்துறையிலும், அரசியல்வாதிகளாகவும் இருப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். பயணம் இருந்தால் சிதறுகாய் உடைத்துவிட்டு செல்ல வேண்டும். பணம் உள்ளிட்ட பொருட்கள் களவு போக வாய்ப்புகள் உள்ளதால் உடமைகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். 

கும்பம்

மன அழுத்தம் உண்டாகும். தொழில், உத்யோகம், வியாபாரம், படிப்பு மேம்படும். புதிய தொழில் ஏற்றம் பெறும். வாழ்கை துணை விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

மீனம் 

லாபம், அனுகூலம், அசையும் அசையா பொருட்கள் சேர்க்கை, முயற்சிகளில் வெற்றி, வீட்டு மாற்றம் உள்ள்ட்டவை உண்டாகும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வீர்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.