Maha Sakthi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அரசியலில் ஜெயிக்க வைக்கும் மகா சக்தி யோகம் யாருக்கு?-unlocking the benefits of maha sakthi yogam in astrology - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maha Sakthi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அரசியலில் ஜெயிக்க வைக்கும் மகா சக்தி யோகம் யாருக்கு?

Maha Sakthi Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ அரசியலில் ஜெயிக்க வைக்கும் மகா சக்தி யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Aug 12, 2024 09:18 PM IST

அரசியலில் உங்களை பிரபலம் அடைய செய்யும், அதிகார வர்கத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தும், முன்னேற்றமான பாதையில் அழைத்து செல்லும், வாழ்கையை புரட்டி போடும் அளவுக்கான யோகங்களை தரும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வெற்றிகளை தரும், அதிகாரம் மிக்கவர்கள் தொடர்புகளால் நீங்களும் அதிகாரம் உடையவர்களாக மாறுவீர்கள்.

’மேஷம் முதல் மீனம் வரை!’ அரசியலில் ஜெயிக்க வைக்கும் மகா சக்தி யோகம் யாருக்கு?
’மேஷம் முதல் மீனம் வரை!’ அரசியலில் ஜெயிக்க வைக்கும் மகா சக்தி யோகம் யாருக்கு?

எப்படி உண்டாகிறது மகாசக்தி யோகம் 

உங்களின் ராசிக்கு, அதாவது 12ஆவது வீட்டில் சனி - ராகு இணைந்து இருந்து இவர்களை வலுப்பெற்ற புதன், குரு அல்லது சுக்கிரன் ஆகிய மூவரில் ஒருவரோ அல்லது இருவரோ, மூவரோ பார்க்கும் போது இந்த யோகம் உண்டாகும். 

மகா சக்தி யோகத்தின் பலன்கள் 

அரசியலில் உங்களை பிரபலம் அடைய செய்யும், அதிகார வர்கத்தோடு தொடர்புகளை ஏற்படுத்தும், முன்னேற்றமான பாதையில் அழைத்து செல்லும், வாழ்கையை புரட்டி போடும் அளவுக்கான யோகங்களை தரும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய வெற்றிகளை தரும், அதிகாரம் மிக்கவர்கள் தொடர்புகளால் நீங்களும் அதிகாரம் உடையவர்களாக மாறுவீர்கள். 

இந்த யோகத்தில் பிறந்தவர்கள் நடுத்தர வயது வரை சாதாரண வாழ்கையை அனுபவித்து வந்தாலும், அதன் பிறகு மிகப்பெரிய வெற்றிகள் இவர்களுக்கு தேடி வரும். மற்றவர்களால் வணங்கி மதிக்கப்படும் உயரத்திற்கு கொண்டுபோய்விடும். எம்.எல்.ஏ, எம்.பி., அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வாரி வழங்கும் யோகமாக இது உள்ளது. 

உதாரணமாக சிம்ம ராசியை எடுத்துக் கொள்வோம். இவர்களின் 12ஆம் இடமான கடகம் ராசியில் சனியும், ராகுவும் இணைந்து இருக்க வேண்டும். இவர்கள் எத்தனை டிகிரிக்குள் இருந்தாலும் ஏதும் பிரச்னை இல்லை. 

மீனம் ராசியில் ஆட்சி பெற்ற குருவும், சுக்கிரனும் இருக்க, ராசிநாதன் ஆன சூரியன் மேஷம் ராசியில் உச்ச வலிமை பெற்று புதன் உடன் உள்ளார் எனில் இந்த மகா சக்தி யோகம் உண்டாகின்றது. 

இரண்டாவதாக துலாம் ராசியை எடுத்து கொள்வோம். துலாம் ராசிக்கு 12ஆம் இடமான கன்னி ராசியில் சனி - ராகு சேர்க்கை ஏற்பட்டு, மீனம் ராசியில் குருவும், சுக்கிரன் உள்ளார்கள். மேஷம் ராசியில் சூரியன், புதன் கிரகங்கள் உள்ளது என்றால் இது மகா சக்தி யோகத்தை ஏற்படுத்தி தரும். 

தெய்வீக செயல்கள்  மூலம் புகழ் பெறுவார்கள் 

இது போன்ற பலம் மிக்க மகா சக்தி யோகம் ஆனது ஆளுபவர்களை, அதிகாரம் செலுத்துபவர்களை, தொழில் அதிபர்களை, சாதாரண நிலையில் இருந்து மிகப்பெரிய வெற்றியாளராக மாறியவர்களை, பொதுச்சேவை மனம் கொண்டவர்களை, அதிகார வர்கத்துடன் நேரடி தொடர்பு உடையவர்களை உருவாக்கும் நபர்களாக உருவாக்கும். இவர்கள் தெய்வீக செயல்களை முன்னின்று எடுத்து செய்வதன் மூலம் புகழை அடைவார்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.