’மேஷம் முதல் மீனம் வரை!’ பெண்களால் வளர்ச்சி! சுகம்! மகிழ்ச்சி, வீழ்ச்சி, கிளர்ச்சி யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’மேஷம் முதல் மீனம் வரை!’ பெண்களால் வளர்ச்சி! சுகம்! மகிழ்ச்சி, வீழ்ச்சி, கிளர்ச்சி யாருக்கு?

’மேஷம் முதல் மீனம் வரை!’ பெண்களால் வளர்ச்சி! சுகம்! மகிழ்ச்சி, வீழ்ச்சி, கிளர்ச்சி யாருக்கு?

Kathiravan V HT Tamil
Nov 05, 2024 06:30 AM IST

பெற்றத் தாய், உடன் பிறந்த சகோதரிகள், பெண் தோழமை, மனைவி, மகள் ஆகிய உறவுகளை ஒரு நபர் கடந்து செல்ல வேண்டும். இதில் தாய், மனைவி, மகள் ஆகிய உறவுகள் வாழ்கையில் பெரும் பகுதி தாக்கத்தை உண்டாக்க கூடியது.

’மேஷம் முதல் மீனம் வரை!’ பெண்களால் வளர்ச்சி! சுகம்! மகிழ்ச்சி, வீழ்ச்சி, கிளர்ச்சி யாருக்கு?
’மேஷம் முதல் மீனம் வரை!’ பெண்களால் வளர்ச்சி! சுகம்! மகிழ்ச்சி, வீழ்ச்சி, கிளர்ச்சி யாருக்கு?

பெற்றத் தாய், உடன் பிறந்த சகோதரிகள், பெண் தோழமை, மனைவி, மகள் ஆகிய உறவுகளை ஒரு நபர் கடந்து செல்ல வேண்டும். இதில் தாய், மனைவி, மகள் ஆகிய உறவுகள் வாழ்கையில் பெரும் பகுதி தாக்கத்தை உண்டாக்க கூடியது. 

ஒரு ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் ஆகியோர் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு பெண்களால் ஆதாயம், வளர்ச்சி, முன்னேற்றம், பொருளாதார வெற்றி, நல்ல அறிவுரைகளை பெறுவது, பெண்கள் வளர்ச்சிக்கு துணை நிற்பது உள்ளிட்ட பல பணிகளை செய்வார்கள். 

ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும் பெண் வீடுகள் எனப்படும் ரிஷபம் மற்றும் கடகம் ஆகிய வீடுகள் கடுமையாக பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியம். ரிஷப வீட்டில் கடுமையான பாவ கோள்கள் அமர்ந்து இருந்தால் குடும்பத்தில் உள்ள பெண்களால் தீராத பிரச்னைகள் உண்டாகும். 

சந்திர பகவான் ஆனவர் கடும் பாவிகள் எனப்படும் சனி, ராகு, கேது, செவ்வாய், சூரியன் ஆகியோர் உடன் சேர்ந்து இருந்தால் பெண்களால் பிரச்னைகள் உண்டாகும்.  அதே போல் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பெண்களால் மிகப்பெரிய சிக்கல்கள் மற்றும் இழப்புகள் உண்டாகும்.

ரிஷபம் ராசியில் சுபக் கோளான குரு, முழு சந்திரன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் அமர்வது நல்ல  பலன்களை தரும்.  கடகம் வீட்டில் சந்திரன், குரு உச்சம் பெற்று அமர்வது, பகைப்பற்ற நிலையில் இருந்தாலும் புதன், சுக்கிரன் இருந்தாலும் நன்மைகளை தரும்.

ஆனால் அதே வேளையில் சனி, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த வீடுகள் கடும் பாதிப்பை சந்திக்கும். 

எனவே ஒரு ஜாதகத்தில் ரிஷபம் மற்றும் கடகம் ஆகிய இரண்டு பெண் வீடுகளும், சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு பெண் தன்மை கொண்ட கிரகங்களும் வலுவாக இருந்தால் பெண்களால் வளர்ச்சி,  முன்னேற்றம், ஆதாயம், பொருள் சேர்க்கை உண்டாகும். 

ஒருவர் எந்த லக்னத்தில் பிறந்து இருந்தாலும், ஒருவருக்கு லாப ஸ்தானம் எனப்படும் 11ஆம் இடத்தில் சுக்கிரன் அல்லது சந்திரன் ஆகிய கிரகங்கள் வலுப்பெற்று இருந்தால்  பெண்களால் எப்போதும் ஆதாயம் கிடைக்கும் என்பது ஜோதிட விதியாகும். 

உதாரணமாக ஒரு மேஷ லக்ன ஜாதகத்தில் 11ஆம் இடமான கும்பத்தில் சுக்கிரன் அதி நட்பு நிலையில் இருந்தாலோ அல்லது வளர்பிறை சந்திரன் ஆக இருந்தாலோ பெண்கள் மூலம் சிறந்த ஆதாயம் கிடைக்கும் என்பது ஜோதிடர்கள் கூற்று ஆகும்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner