Today Rasipalan (25.07.2024) சங்கடங்கள் மறையுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் இதோ..!
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 25) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasipalan (25.07.2024) சங்கடங்கள் மறையுமா?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் இதோ..!
மேஷம்
கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். ஆடம்பரமான செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்வது நல்லது. வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். புண்ணிய தல பயணம் கைகூடும். பேச்சுவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் மேம்படும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய பிரச்சனைகளை மாறுபட்ட விதத்தில் முடிப்பீர்கள்.
மிதுனம்
வீட்டில் மன மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். வியாபார ரீதியான உதவிகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட ஈடுபாடு உண்டாகும். பணி சார்ந்த முயற்சிகளில் வாய்ப்புகள் தேடி வரும்.
கடகம்
எதிர்பாராத சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் செல்ல நினைத்த இடங்களுக்கு சென்று வருவீர்கள். . நண்பர்களின் ஆலோசனைகள் மூலம் புதிய பாதைகள் புலப்படும். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். நெருங்கியவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய மாற்றம் ஏற்படும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும்.
கன்னி
வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழல் அமையும்.
துலாம்
கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தியானம் மற்றும் மன ஒருமைப்பாட்டு செயல்களில் ஆர்வம் ஏற்படும். எடுத்த காரியம் நிறைவேறுவதில் அலைச்சல் உண்டாகும்.
விருச்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தன வரவுகள் சாதகமாக இருக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். இலக்கிய பணிகளில் தனிப்பட்ட ஈர்ப்பு உண்டாகும். அனாவசிய செலவுகளை குறைப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள்.
தனுசு
குடும்ப பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஆரோக்கியம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எடுத்து செல்லும் உடமைகளில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.
மகரம்
அக்கம்-பக்கத்தினரிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வழக்கு பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
வியாபாரத்தில் லாபகரமான சூழல் அமையும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். நண்பர்களால் அனுகூலம் கிடைக்கும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். மனதில் இருந்துவந்த குழப்பம் விலகும்.
மீனம்
பணிபுரியும் இடத்தில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் வேகத்தை விட விவேகத்தை கையாளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். எண்ணங்களின் போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான பயணம் மேம்படும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்