Today Rasi Palan (19.07.2024): நினைத்தது நடக்குமா?..தெளிவு பிறக்குமா?.. மேஷம் முதல் மீனம் வரை..இன்றைய ராசிபலன்கள் இதோ!
Today Rasi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 19) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 29, 2025 10:53 AMசனி இன்று நுழைகிறார்.. உத்திரட்டாதியில் பண யோகம் பொங்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா?
Apr 29, 2025 10:44 AMபரசுராம் ஜெயந்தியில் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! நல்ல நேரமும் லாபமும் வரும் நேரம் இது!
Apr 29, 2025 05:00 AM'நல்ல செய்தி தேடி வரும்.. உழைப்பு முக்கியம்' இன்று ஏப்.29, 2025 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 28, 2025 02:30 PMஇந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் அதிர்ஷ்ட யோகம்.. நிதி ஆதாயங்கள், மன அமைதி கிடைக்கும்!
Apr 28, 2025 05:00 AMவெற்றி சாத்தியம்.. பணத்தை பத்திரம்.. கவனமா இருக்க வேண்டியது யார்.. இன்று ஏப்.28 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 27, 2025 02:57 PMகௌரி யோகம் 5 ராசிகளின் செல்வத்தையும் செழிப்பையும் அதிகரிக்கும்.. வாராந்திர டாரட் பலன் என்ன?
மேஷம்
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். வேலையில் பணியாட்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் பொறுமை வேண்டும். வங்கி சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான அலைச்சல் ஏற்படும்.
ரிஷபம்
எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுமையான சூழல் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும்.
மிதுனம்
வேலையில் நல்ல மாற்றம் உண்டாகும். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும்.
கடகம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும்.
சிம்மம்
மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் ஏற்படும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும்.
கன்னி
வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். துணைவர் வழியில் ஆதாயம் ஏற்படும். பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பொருளாதார விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும்.
துலாம்
உடன் பிறந்தவர்களால் அலைச்சல் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். விளையாட்டு துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
விருச்சிகம்
மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். உயர் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகளின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும்.
தனுசு
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உடனிருப்பவர்களால் மனதளவில் மாற்றம் ஏற்படும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது உயர்வை தரும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும்.
மகரம்
காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். சுப செலவுகளால் கையிருப்பு குறையும். தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபத்தை மேம்படுத்த முடியும்.
கும்பம்
வருமான வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். முதலாளி வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மீனம்
சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்