மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.18 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.18 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.18 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Nov 18, 2024 05:30 AM IST

மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (நவம்பர் 18) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.18 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று நவ.18 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசி உள்ளிட்ட 6 ராசியினருக்கு வாரத்தின் முதல் நாளான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசியினரே வாரத்தின் முதல் நாளான இன்று உங்களது நிதி நிலைமை சிறப்பானதாக இருக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரம் நிமித்தமான கொடுக்காமல் இருந்துவந்த இழுபறிகள் மறையும். எதிலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தந்தை வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். திட்டமிட்ட பணிகள் கைகூடிவரும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

ரிஷபம்

ரிஷப ராசியினரே கனிவான பேச்சுக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுக்கல் வாங்கலில் லாபம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். குடும்பத்தாரின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். 

மிதுனம்

நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்கவும். கலைத் துறைகளில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் மலரும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும்.  

கடகம்

ஆரோக்கியம் மேம்படும். நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சமூகப் பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். ஆடம்பரமான செலவுகளைத் தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். மனதளவில் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். 

சிம்மம்

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். பொருளாதார சிக்கல்கள் குறையும். 

கன்னி

தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வீடு பராமரிப்பு சார்ந்த எண்ணங்கள் மேம்படும். தொழில் நிமித்தமான அலைச்சலால் அனுபவம் மேம்படும். சொந்த ஊர் தொடர்பான பயணம் கைகூடும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்