Today Rasipalan (16.09.2023): பொறுமை தேவை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Today Rasipalan: ஒவ்வொரு ராசிகளுக்கும் செப்டம்பர் 16 ஆம் நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கு இன்றைய பலன்கள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
மேஷம்
உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் கவனம் தேவை. பழைய சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் மாற்றமான சூழல் அமையும். மனதளவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ரிஷபம்
தடைகள் விலகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். திடீர் முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை.
மிதுனம்
உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களின் வழியில் சாதகமான சூழல் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். பொறுமையைக் கடைபிடிப்பதால் மேன்மை ஏற்படும். பயணங்களில் அனுபவம் ஏற்படும்.
கடகம்
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை மத்திமமாக இருக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
சிம்மம்
வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பேச்சுத் திறமைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
கன்னி
புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். திடீர் செலவுகளால் கையிருப்புகள் குறையும். வியாபார பணிகள் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த தெளிவு உண்டாகும்.
துலாம்
சகோதரர் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். தன்னம்பிக்கையுடன் செயல்படவும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும்.
விருச்சிகம்
எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி உண்டாகும். சிந்தனையின் போக்கில் தெளிவு ஏற்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
தனுசு
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசுவீர்கள்.
மகரம்
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நட்பு வட்டம் விரிவடையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும்.
கும்பம்
பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் உண்டாகும். முக்கியமான முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும்.
மீனம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். பிள்ளைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். புதிய சிந்தனைகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும்.
டாபிக்ஸ்