(27.10.2024) இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  (27.10.2024) இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

(27.10.2024) இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Oct 27, 2024 06:11 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 27) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(27.10.2024) இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
(27.10.2024) இந்த நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

மேஷம்

மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். .

ரிஷபம்

விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். 

மிதுனம்

உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். 

கடகம்

சுப நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். விலகிச் நின்றவர்கள் விரும்பி வருவார்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு உயரும். புது முதலீடு செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். எதிர்பாராத சிலருடைய சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். .

சிம்மம்

நீண்ட காலமாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும். சுப காரிய விஷயங்களில் பொறுமை வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. வேலையாட்களால் அனுகூலமான சூழல் அமையும். இடுப்பு மற்றும் காலில் சிறு சிறு வலிகள் தோன்றி மறையும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். 

கன்னி

எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். சேமிப்புகளின் மூலம் ஆதாயமான வாய்ப்புகள் அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும.

துலாம்

 நெருக்கமானவர்களிடத்தில் அதிக உரிமை கொள்வதை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில வரவுகள் தாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உத்தியோகத்திலும் மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். 

விருச்சிகம்

தந்தைவழி உறவுகளின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். துணைவர் வழியில் மதிப்பு அதிகரிக்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

தனுசு

சொத்து பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கலைத்துறையில் சாதகமான சூழல் ஏற்படும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குழந்தைகளால் மதிப்பு உயரும். கடனை அடைப்பதற்கான வழிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.

மகரம்

வெளியூர் பயணங்கள் நன்மை தரும். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். கலைத்துறையில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். நிர்வாக துறைகளில் உயர்வு ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். 

கும்பம்

புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். 

மீனம்

மனதில் நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் சிலருக்கு அமையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

Whats_app_banner

டாபிக்ஸ்