(21.10.2024) இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (அக்டோபர் 21) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
இது போன்ற போட்டோக்கள்
Apr 19, 2025 01:29 PM62 ஆண்டுகளுக்கு பின் இன்று பாரிஜாத யோகம்.. எந்த 3 ராசிகளுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும் பாருங்க!
Apr 19, 2025 07:00 AMகுபேர ராசிகள்: 4 ராஜ யோகங்கள்.. 3 குபேரன் ராசிகள்.. அக்ஷய திருதியை நாளில் லட்சுமி தேவி பண மழை.. உங்க ராசி என்ன?
Apr 19, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : 19 ஏப்ரல் 2025 மேஷம் முதல் மீனம் வரையான ராசியினரே உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
Apr 18, 2025 01:26 PM'வியாபாரத்தில் நஷ்டம், வாழ்க்கைத்துணையுடன் மோதலுக்கு வாய்ப்பு': ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
Apr 18, 2025 01:20 PMராகு பெயர்ச்சி பலன்கள்: பணமழை கொட்டும் ராகு.. அதிர்ஷ்டமான ராசிகள்.. கும்பத்தில் யோகம் பிறக்குது!
Apr 18, 2025 05:00 AMஇன்றைய ராசிபலன் : மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசியினரே.. ஏப்ரல் 18, 2025 ல் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பாருங்க!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வியாபாரப் பணிகளில் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொத்து விற்பது தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். பணிவு வேண்டிய நாள்.
ரிஷபம்
விவாதங்கள் மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் முன்னேற்றம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான சூழ்நிலை உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான சூழ்நிலை உண்டாகும். வியாபாரப் பணிகளில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள்.
மிதுனம்
எதிலும் வேகமின்றி பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக முயற்சிகளில் காலதாமதமான பலன்கள் கிடைக்கும். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணம் மேம்படும்.
கடகம்
பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுகளுக்கேற்ப விரயங்களும் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். கடன் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய வீடு மற்றும் நிலம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.
சிம்மம்
நுணுக்கமான விஷயங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். மனதில் வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்வது சேமிப்பிற்கு நன்மை அளிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள்.
கன்னி
தொழில் முதலீடுகளை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் தொழில் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய ஒப்பந்தம் சார்ந்த விஷயங்கள் சாதகமாக நிறைவுபெறும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். அரசு ரீதியிலான உதவிகள் சிலருக்கு சாதகமாக அமையும். பக்தி நிறைந்த நாள்.
துலாம்
எதிர்பாராத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவுகளை எடுக்கவும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதுவிதமான அறிமுகமும், அனுபவங்களும் ஏற்படும். வியாபார முதலீடுகள் அதிகரிக்கும். விளையாட்டு சார்ந்த செயல்பாடுகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். எதிர்பாலின மக்கள் தொடர்பான விஷயங்களை சிந்தித்துச் செயல்படுவது அவசியம். நட்பு நிறைந்த நாள்.
தனுசு
புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றமும், மகிழ்ச்சியான தருணங்களும் ஏற்படும். வரவுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். திறமையான பேச்சுக்கள் மூலம் காரிய சித்திகள் உண்டாகும்.
மகரம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். மனை சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் எதிர்பார்த்த முடிவினை அளிக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
கும்பம்
திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் செலுத்துவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனக்கசப்புகள் குறையும். கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

டாபிக்ஸ்