Today Rashi Palan 18.09.2024: இன்று சந்திர கிரகணம்..மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும்? - 12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு சந்திர கிரகணம் நிகழும் இன்று (செப்டம்பர் 18) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வியாபார பணிகளில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும்.
ரிஷபம்
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பேச்சு வன்மையால் காரி அனுகூலம் உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
மிதுனம்
புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எண்ணங்கள் மேம்படும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
கடகம்
கல்வி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றமும் புத்துணர்ச்சியும் உருவாகும். நீண்ட கால கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
சிம்மம்
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும்.
கன்னி
கணவன் மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
துலாம்
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.
விருச்சிகம்
வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிட்ட செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான கோப்புகள் மற்றும் பொருள்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும்.
தனுசு
மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் பயணங்களில் நிதானம் வேண்டும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விவசாயம் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்
திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும்.
கும்பம்
குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகளில் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும்.
மீனம்
தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்