Today Rashi Palan 13.09.2024: இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!-today rashi palan daily horoscope tamil astrological prediction for 13 september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rashi Palan 13.09.2024: இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

Today Rashi Palan 13.09.2024: இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Sep 13, 2024 06:32 AM IST

Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 13) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan 13.09.2024: இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan 13.09.2024: இன்று நாள் எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம்

ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சொத்து விற்பனை மற்றும் வாங்குவதில் லாபம் உண்டாகும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.

ரிஷபம்

மனதில் ஆடம்பரமான எண்ணங்கள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். இளைய சகோதரர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். 

மிதுனம்

வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையை தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். முயற்சிகள் நிறைந்த நாள்.

கடகம்

பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். வெளி வட்டாரங்களில் மதிப்பு உயரும். பழைய பிரச்சனைகள் குறையும். வியாபாரம் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். 

சிம்மம்

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். உயர் கல்விகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். சொந்த ஊர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். அரசு பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். எண்ணிய சில பணிகள் நினைத்தபடி நிறைவேறும்.  

கன்னி

குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் கைகூடும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். 

துலாம்

எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆடம்பர பேச்சுக்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் கவனத்துடன் செயல்படவும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு கருத்துகளை வெளிப்படுத்தவும். உத்தியோக பொறுப்புகளால் சோர்வு ஏற்பட்டு நீங்கும். 

விருச்சிகம்

வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். சகப்பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய செயல்கள் சாதகமாக முடியும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் தன்னம்பிக்கை ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். 

தனுசு

ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். தன நெருக்கடிகள் குறையும். மாறுபட்ட அணுகுமுறைகளால் புதுமைகளை செயல்படுத்துவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். 

மகரம்

வருமானம் முன்னேற்றத்தை பற்றி சிந்திப்பீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். 

கும்பம்

கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உறவுகள் மத்தியில் செல்வாக்கு மேம்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் ஏற்படும். நம்பிக்கை உரியவர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். 

மீனம்

உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். பூர்வீகத்தில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள்.  

Whats_app_banner

டாபிக்ஸ்