Today Rashi Palan 12.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிகளுக்கான பலன்கள்!-today rashi palan daily horoscope tamil astrological prediction for 12 september 2024 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rashi Palan 12.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிகளுக்கான பலன்கள்!

Today Rashi Palan 12.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிகளுக்கான பலன்கள்!

Karthikeyan S HT Tamil
Sep 12, 2024 05:00 AM IST

Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 12) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rashi Palan 12.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிகளுக்கான பலன்கள்!
Today Rashi Palan 12.09.2024: இன்றைய ராசிபலன்கள்..மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்?..12 ராசிகளுக்கான பலன்கள்!

மேஷம்

சட்டம் சார்ந்த சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். 

ரிஷபம்

சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பணியாட்கள் மூலம் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். தூர தேச பயண செயல்களில் விவேகம் வேண்டும். இணைய முதலீடுகளில் பொறுமை வேண்டும். செயல்படும் விதத்தில் மாற்றம் ஏற்படும். 

மிதுனம்

வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பழகும் விதங்களின் மூலம் ஆதாயத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். 

கடகம்

பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். முயற்சிக்கேற்ப புதிய வாய்ப்புகள் அமையும். 

சிம்மம்

மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். 

கன்னி

புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தாய்வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். 

துலாம்

பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். 

தனுசு

வியாபாரத்தில் இடமாற்ற எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்களில் அனுகூலம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும்.  

மகரம்

எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வெளி உலக அனுபவம் மூலம் மாற்றம் ஏற்படும். சேவை பணிகளில் புதிய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். வர்த்தகப் பணிகளில் பொறுமை வேண்டும். 

கும்பம்

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். அரசு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

மீனம்

கடன் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். கால்நடை தொடர்பான பணிகளில் ஆர்வம் பிறக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாயப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். 

Whats_app_banner

டாபிக்ஸ்