(02.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  (02.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

(02.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?.. மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Nov 02, 2024 05:45 AM IST

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (நவம்பர் 02) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(02.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
(02.11.2024) இந்த நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்?..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!

மேஷம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். வரவு நிறைந்த நாள்.

ரிஷபம்

எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்களின் பலம் ஓரளவு குறையும். உத்தியோகத்தில் மனநிறைவு ஏற்படும். கோபத்தை குறைத்துக்கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

மிதுனம்

எண்ணங்களில் புதிய தெளிவு பிறக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். செலவுகளை குறைப்பதற்கான சிந்தனைகள் மேம்படும். வியாபாரப் பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

கடகம்

உயர் கல்வி சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர் பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். மனதில் புதிய துறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். பக்தி நிறைந்த நாள்.

சிம்மம்

புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனை சார்ந்த செயல்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி சார்ந்த செயல்களில் மேன்மை ஏற்படும். உறவினர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் மாற்றங்கள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.

கன்னி

குடும்பத்தில் உங்கள் கருத்துகளுக்கு ஆதரவு கிடைக்கும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். வாகன வசதிகள் மேம்படும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.

துலாம்

உடன்பிறந்தவர்கள் மூலம் சில செலவுகள் வரும். வதந்திகளை நம்பி முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். வழக்கமான சில பணிகளில் திடீர் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் நல்ல புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் மாறுபட்ட வாய்ப்புகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். நலம் நிறைந்த நாள்.

விருச்சிகம்

வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரங்களில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் மேம்படும். சிக்கல் மறையும் நாள்.

தனுசு

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். வாகனப் பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். சூழ்நிலை அறிந்து பேசுவது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.

மகரம்

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். முயற்சிக்கேற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.  உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும்.

கும்பம்

அரசு பணிகளில் சற்று பொறுமையுடன் செயல்படவும். வாகன மாற்ற சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

மீனம்

மூத்த உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

Whats_app_banner

டாபிக்ஸ்