துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.22 யாருக்கு யோகம் தேடி வரும்?.. ராசிபலன் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.22 யாருக்கு யோகம் தேடி வரும்?.. ராசிபலன் இதோ!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.22 யாருக்கு யோகம் தேடி வரும்?.. ராசிபலன் இதோ!

Karthikeyan S HT Tamil
Dec 22, 2024 05:05 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 22 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.22 யாருக்கு யோகம் தேடி வரும்?.. ராசிபலன் இதோ!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.22 யாருக்கு யோகம் தேடி வரும்?.. ராசிபலன் இதோ!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்படும். புதிய தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எழுத்துத் துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே வரவுகள் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். பேச்சுகளால் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். கற்றல் திறனில் சில மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே தொழில்நுட்பக் கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வங்கிப் பணிகளில் விவேகம் வேண்டும். தனிப்பட்ட இலக்குகள் உருவாகும். திட்டமிட்ட செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறி குறையும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே மனதில் தேவையில்லாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வதன் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். உத்தியோக பணிகளில் மறைமுக சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். கடன் முயற்சிகளில் விவேகம் வேண்டும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே தம்பதிகளுக்கு இடையே புரிதல் ஏற்படும். மற்றவர்கள் செயலால் மனதில் மாற்றம் ஏற்படும். கடன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். வியாபாரத்தில் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் பயணங்கள் சென்று வருவீர்கள். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner