துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.21 யாருக்கு பிரச்னைகள் குறையும் பாருங்க!
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 21 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 21 ஆம் தேதியான இன்று (சனிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. இறை வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களே விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். தூரதேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்புகள் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். அஞ்ஞான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களே கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் பயணத்தில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி இன்னல்கள் குறையும். பணி பொறுப்புகளால் நேரம் தவறி உண்பீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் உண்டாகும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.