துலாம் முதல் மீனம் ராசி வரை.. இன்று டிச.20 யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது பாருங்க.. ராசிபலன் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம் முதல் மீனம் ராசி வரை.. இன்று டிச.20 யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது பாருங்க.. ராசிபலன் இதோ!

துலாம் முதல் மீனம் ராசி வரை.. இன்று டிச.20 யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது பாருங்க.. ராசிபலன் இதோ!

Karthikeyan S HT Tamil
Dec 20, 2024 05:05 AM IST

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 20 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

துலாம் முதல் மீனம் ராசி வரை.. இன்று டிச.20 யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது பாருங்க.. ராசிபலன் இதோ!
துலாம் முதல் மீனம் ராசி வரை.. இன்று டிச.20 யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது பாருங்க.. ராசிபலன் இதோ!

ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 20 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே தடைபட்ட பணிகள் முடியும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உருவாக்கும். 

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.  குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தொழிற்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வீட்டில் மனதிற்குப் பிடித்தவாறு சில மாற்றங்களைச் செய்வீர்கள். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். செய்யும் முயற்சிகளுக்கு அங்கீகாரங்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே வியாபாரப் பணிகளில் விவேகம் வேண்டும். உடன் பிறந்தவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். திடீர் செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்படும். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படவும். இணையம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும்.  நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.

மீனம்

மீன ராசி அன்பர்களே மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.  

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner