துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil
Nov 19, 2024 05:47 AM IST

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு இன்று (நவம்பர் 19) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு தெரிந்து கொள்ளலாம்.

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!
துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று நவ.19 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

அந்தவகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

துலாம்

துலாம் ராசியினரே திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய நண்பர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினரே பயனற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். வாடிக்கையாளரிடம் அனுசரித்துச் செல்லவும். புத்திரர்களால் அலைச்சல் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூகம் பற்றிய புதிய பார்வை ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர்த்தக துறையில் மேன்மை ஏற்படும். மனதிற்கும் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்கள் மீதான கண்ணோட்டங்களில் மாற்றம் உண்டாகும்.

மகரம்

நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும். திறமைகளை வெளிப்படுத்த சில வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

கும்பம்

அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் சற்று கவனம் வேண்டும். வரவு மேம்படுத்துவது தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துக்கள் விஷயங்களில் விவேகம் வேண்டும். அலுவலக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கொடுக்கல் வாங்கலில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் புதுமை பிறக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்