துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.18 யாருக்கு சூப்பரான நாள்?.. ராசிபலன் இதோ!
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) துலாம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களுக்கு உறவுகள் வழியில் ஆதாயம் உண்டாகும். உற்பத்தி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அரசுப் பணிகள் மூலம் லாபகரமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு பணிகளில் இழுபறியான சூழ்நிலை காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைப்பட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
தனுசு
தனுசு ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். காப்பீடு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில தடுமாற்றம் ஏற்படும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.
மகரம்
மகர ராசி அன்பர்களே நண்பர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் இருப்பவர்களால் பொறுப்புகள் மேம்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்காலம் சார்ந்த சில பணிகளை செய்வீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். சிந்தனைப் போக்கில் சில மாற்றங்கள் காணப்படும்.
கும்பம்
கும்ப ராசி அன்பர்களுக்கு எதிர்பாராத வரவுகள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் வருகை உண்டாகும். கமிஷன் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். பயணங்கள் மூலம் அலைச்சல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும்.
மீனம்
மீன ராசி அன்பர்களே நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். சில நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். வழக்குகளில் சில திருப்பமான சூழல் உண்டாகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். புதிய வகை உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.