மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.22 யாருக்கு சாதகமாக இருக்கும்? - ராசிபலன் இதோ!
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 22 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 22 ஆம் தேதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசி அன்பர்களே இன்று நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி அன்பர்களே வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். இடது காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தொழிலில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
கடகம்
கடக ராசி அன்பர்களே வெளியூர் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். சொத்துப் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய யுத்திகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்விப் பணி நிறைவான மகிழ்ச்சியை தரும்
சிம்மம்
சிம்ம ராசி அன்பர்களே மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான விசயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே வாகனப் பயணங்களில் தகுந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான சோர்வு மூலம் சுறுசுறுப்பின்மை உண்டாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.