மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.17 எந்த ராசிக்கு மாற்றம் ஏற்படும் பாருங்க..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.17 எந்த ராசிக்கு மாற்றம் ஏற்படும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.17 எந்த ராசிக்கு மாற்றம் ஏற்படும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil
Dec 17, 2024 05:05 AM IST

ஜோதிட கணக்கீட்டின் படி, மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு இன்று (டிசம்பர் 17) வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.17 எந்த ராசிக்கு மாற்றம் ஏற்படும் பாருங்க..!
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.17 எந்த ராசிக்கு மாற்றம் ஏற்படும் பாருங்க..!

அந்தவகையில், மேஷம் முதல் கன்னி வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே புதிய யுக்திகளால் தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். 

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே உத்தியோக பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயனற்ற வாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும். இடமாற்றம் சார்ந்த எண்ணம் கைகூடும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் லாபம் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே உத்தியோகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமுகப் பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். வரவுக்கு ஏற்ற செலவு உண்டு.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். மேன்மை உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner