Today Pooja Time : இன்று செப். 29 ஞாயிற்றுக்கிழமை.. இன்றைய வழிபாடு.. பூஜைக்கான நேரம்.. வழிபாட்டு முறைகளும்.. நன்மைகளும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Pooja Time : இன்று செப். 29 ஞாயிற்றுக்கிழமை.. இன்றைய வழிபாடு.. பூஜைக்கான நேரம்.. வழிபாட்டு முறைகளும்.. நன்மைகளும்!

Today Pooja Time : இன்று செப். 29 ஞாயிற்றுக்கிழமை.. இன்றைய வழிபாடு.. பூஜைக்கான நேரம்.. வழிபாட்டு முறைகளும்.. நன்மைகளும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 29, 2024 06:17 AM IST

Today Pooja Time : ஞாயிற்றுக்கிழமையில் நவகிரக நாயகனான சூரிய பகவானுக்கு மிகவும் உகந்த நாள். இதனால் ஞாயிற்று கிழமை விரதம் இருந்து பூஜை செய்து வந்தால் சூரிய தோஷம் விலகும். நம் வாழ்வில் தொடர்ந்து வரும் துன்பங்கள் நீங்கும். மனம் மகிழ்ச்சி பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.

Today Pooja Time : இன்று செப். 29 ஞாயிற்றுக்கிழமை.. இன்றைய வழிபாடு.. பூஜைக்கான நேரம்.. வழிபாட்டு முறைகளும்.. நன்மைகளும்!
Today Pooja Time : இன்று செப். 29 ஞாயிற்றுக்கிழமை.. இன்றைய வழிபாடு.. பூஜைக்கான நேரம்.. வழிபாட்டு முறைகளும்.. நன்மைகளும்!

இன்றைய பஞ்சாங்கம்

தமிழ் ஆண்டு : குரோதி வருடம்

தமிழ் மாதம் : புரட்டாசி

தேதி: 13

கிழமை : ஞாயிற்றுக்கிழமை

பிறை : தேய்பிறை

திதி: துவாதசி

இரவு : 07.15 வரை, பின்பு திரயோதசி

நட்சத்திரம் : ஆயில்யம் காலை 7 மணி 9 நிமிடம் வரை பின்பு மகம்

சூரிய உதயம்

காலை : 6.03

நல்ல நேரம்

காலை : 07.45 - 08.45 வரை

மாலை: 03.15 - 04.15 வரை

ராகு- காலம்

மாலை: 04.30 - 06.00 வரை

௭மகண்டம்

பகல்: 12.00 - 01.30. வரை.

குளிகை

மாலை: 03.00 - 04.30. வரை.

( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் ஹம்செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)

சந்திராஷ்டம நட்சத்திரம்:

பூராடம்

ஞாயிற்றுக்கிழமையின் சிறப்பு வழிபாடு

ஒரு மனிதனின் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று பூஜைக்கு மிகவும் உகந்தது. ஞாயிற்றுக்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். அதுமட்டும் இல்லாமல் மகா விஷ்ணுக்கும் மிகவும் உகந்த நாள். சூரிய பகவானின் வழிபாடு பெரியவர்களுக்கு மட்டும் அல்ல குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. அவர் கல்விக்கு உரிய தெய்வமாகவும் விளங்குகிறார். இதனால் ஞாயிற்றுக்கிழமை சூரிய நமஸ்காரம் செய்வது மிகவும் நல்லது. அதே போல் ஞாயிற்றுக்கிழமை செய்யும் தியானம் என்பது மிகவும் நல்லது. அதேபோல் ஞாயிறன்று பசு, எறும்பு, புறா, நாய் போன்ற உயிரினங்களுக்கு உணவு அளிக்கலாம்.

ராகு காலம் கால பைரவர், காளி, சர்வேஷ்வரர் போன்ற தெய்வங்களை வழிபட உகந்த நேரம். அந்த நேரத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுவது விஷேசம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner