Today Rasi palan (13.8.2023): இந்த ஞாயிறு எப்படி இருக்கும்? - 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Horoscope (13.08.2023): ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
மேஷம்
கடன் பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறதி சார்ந்த பிரச்னைகள் குறையும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும்.
ரிஷபம்
வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பார்வை தொடர்பான பிரச்னைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
மிதுனம்
வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். பணியில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். கவனம் வேண்டிய நாள். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். வெளியூர் பயண சிந்தனைகள் மேம்படும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும்.
கடகம்
நிம்மதி நிறைந்த நாள். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள்.
சிம்மம்
கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். வருமான வாய்ப்புகள் மேம்படும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
கன்னி
ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். தடைகள் குறையும் நாள். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். வியாபார சிந்தனைகள் மேம்படும். அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அலுவலகப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும்.
துலாம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராயினரே அமைதி வேண்டிய நாள். காப்பீட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மறைமுக எதிர்ப்புகளால் விரயம் உண்டாகும். பயனற்ற வாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
தனுசு
பலதரப்பட்ட மக்களின் தொடர்பு ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செலவு நிறைந்த நாள்.
மகரம்
எதிராக இருந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.
கும்பம்
அரசு காரியங்களில் பொருமை வேண்டும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள். மனதளவில் உற்சாகமான சிந்தனைகள் உண்டாகும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். போட்டி, பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும்.
மீனம்
முயற்சிக்கு உண்டான அனுகூலம் ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள். வாகனம் தொடர்பான பிரச்னைகள் குறையும். தந்தை வழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
டாபிக்ஸ்