Tiruchanur Temple : திருச்சானூர் கோயில் தெப்போற்சவம் 4ஆவது நாள்.. கருட வாகன சேவை!
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் தெப்ப உற்சவம் ஜூன் 04 வரை இதெல்லாம் கிடையாது
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் தெப்போற்சவம் விழாவின் 3-வது நாளான நேற்று அதிகாலை தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளல், சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை நடந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் நிர்வகிப்படும் கோயில்களில் ஒன்று திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயில். இக்கோவில் திருப்பதியில் இருந்து 5 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் திருச்சானூர் சென்று பத்மாவதி தாயாரை தரிசிப்பது வழக்கம்.
திருமலையில் நடக்கும் அனைத்து உற்சவங்களும் தினமும் திருச்சானூரிலும் நடைபெறும். அந்த வரிசையில் திருச்சானூரி பத்மாவதி தாயார் கோவிலில் மே 31 ம் தேதி துவங்கி ஜூன் 04 ம் தேதி வரை வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இந்த ஐந்து நாட்களும் தினமும் மாலையில் பத்மாவதி தாயார் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
விழாவின் 3-வது நாளான நேற்று அதிகாலை தாயார் சுப்ரபாதத்தில் எழுந்தருளல், சஹஸ்ர நாமார்ச்சனை, நித்யார்ச்சனை நடந்தது. மாலை 3.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பத்ம புஷ்கரணியில் உள்ள நீராழி மண்டபத்தில் உற்சவர் பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு மாலை 6.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தெப்போற்சவம் நடந்தது.
அதில் உற்சவர் பத்மாவதி தாயார் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 3 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்போற்சவம் முடிந்ததும் உற்சவர் பத்மாவதி தாயார் கோயிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஜூன் 04 ம் தேதி அதாவது நாளை கருட வாகன சேவையும் நடத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்