Thana Laabam: செப்டம்பர் 20 வரை இந்த ராசிக்காரருக்கு தனலாபம் பெருகும்!
"அசுரகுரு எனப்படும் சுக்ரனும் ஐந்தாம் இடத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். நீங்கள் பேச்சில் மட்டுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்."
மீன ராசிக்காரருக்கு செப்டம்பர் 20ம் தேதி வரை எடுத்த காரியத்தில் வெற்றியும், தனலாபமும் கிடைக்கும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஆனால், இதில் ஒரு கன்டிஷனையும் ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது வருவதை ஏற்றுக் கொண்டு மீன ராசிக்காரர்கள் செயல்பட வேண்டுமாம். அவர்களாக ஏதாவது செய்யப் போனால், பிரச்சனை நேரிடும் என்கின்றனர்.
மீன ராசிக்காரர்களுக்கு லக்னாதிபதியும், 10ம் இடத்து அதிபதியுமான குரு பகவான் இரண்டில் இருக்கிறார். குரு பகவான் இரண்டில் இருப்பது நல்லது. ஆனால், அவருடன் ராகுவும் சேர்ந்திருக்கிறார்.
அதனால், அறிவு தடுமாற்றம் உங்களுக்கு வரலாம் என கூறப்படுகிறது பேச்சில் தடுமாற்றம் வரும் எனவும் ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
அசுரகுரு எனப்படும் சுக்ரனும் ஐந்தாம் இடத்தில் வக்ரம் பெற்றிருக்கிறார். நீங்கள் பேச்சில் மட்டுமே மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
6 இல் சூரியன் இருப்பது மீன ராசிக்காரராகிய உங்களுக்கு நல்லது தான். ஆனாலும், எதிரிகளுடன் பேசும்போது கவனம் தேவை.
வருவதை ஏற்று வெற்றி, தனலாபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் பேசுவதில் மட்டுமே மிகுந்த கவனத்தில் இருக்க வேண்டும். 12ம் இடத்தில் சனி பகவான் இருப்பதால் வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
பேசுவதில் மிகுந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்பது ஜோதிட வல்லுநர்களால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவதை கவனத்தில் கொள்ளுங்கள். மேலதிக தகவல்களுக்கு உங்கள் ஜாதகத்தை வைத்து ஜோதிடரிடம் கேட்டு அறியவும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்