Madurai Koodal Alagar Temple: கோலகலமாக நடைபெற்ற மதுரை கூடழலகர் பொருமாள் கோயில் தேரோட்டம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Madurai Koodal Alagar Temple: கோலகலமாக நடைபெற்ற மதுரை கூடழலகர் பொருமாள் கோயில் தேரோட்டம்

Madurai Koodal Alagar Temple: கோலகலமாக நடைபெற்ற மதுரை கூடழலகர் பொருமாள் கோயில் தேரோட்டம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 04, 2023 07:01 AM IST

108 வைணவ தேசங்களில் 47வது தலமாக திகழும் மதுரை கூடல் நகர் அழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்ட நிகழ்வின் காட்சிகள்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தேரோட்ட நிகழ்வின் காட்சிகள்

இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் தெற்கு மாசி வீதியில் காலை 6 மணிக்கு வியூக சுந்தரராஜ பொருமாள் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு காலை 6.30 மணிக்கு தேரோட்டமானது தொடங்கியது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரடியில் கிளம்பய தேர் தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, மேலமாசி வீதி வழியாக காலை 9 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது.

தேரோட்டத்தை முன்னிட்டு முக்கிய சாலைகளில் மாற்றம் செய்யப்பட்டதுடன், சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

தேரோட்டம் நிகழ்வை தொடர்ந்து திருத்தேர் தடம் பார்க்கும் நிகழ்ச்சி, குதிரை வாகனம் பெருமாள் புறப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து தசாவதார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் கருட வாகன புறப்பாடு, இறுதி நிகழ்வாக 8ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழாவானது நிறைவு பெறுகிறது. இந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்