Thisai Palangal: ’கன்னி முதல் மீனம் வரை!’ வாழ்கையில் ஏற்றிவிடும் கிரகம் எது? கீழே தள்ளிவிடும் கிரகம் எது?
Thisai Palangal: பொதுவாக திரிகோணாதிபதிகள் எப்போதும் நன்மை செய்ய கடமைப்பட்டவர்கள். உதாரணமாக மேஷம் லக்னத்தில் 1, 5, 9-க்கு உடைய செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்கள் கட்டாயம் நன்மைகள் தரக்கூடியது.
துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கான திசை பலன்கள் இதோ…!
பொதுவாக திரிகோணாதிபதிகள் எப்போதும் நன்மை செய்ய கடமைப்பட்டவர்கள். உதாரணமாக மேஷம் லக்னத்தில் 1, 5, 9-க்கு உடைய செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்கள் கட்டாயம் நன்மைகள் தரக்கூடியது.
துலாம்
துலாம் லக்னத்திற்கு லக்னாதிபதியாக உள்ள சுக்கிரன் எட்டாம் இடத்தின் ஆதிபத்தியம் பெறுவதால் சுக்கிர திசையில் சில எதிர்மறை பலன்கள் ஏற்படும். பாக்கியாதிபதி புதன் விரையாதியாகவும் உள்ளதால் புதன் திசையில் விரையங்கள் உண்டாகும். ஆனால் சனி திசை உங்களுக்கு முழு ராஜயோக பலன்களை தரும். சந்திரன் தேய்ப்பிறையில் இருந்து திசை நடத்தினால் நற்பலன்களையும், வளர்பிறையில் இருந்து திசை நடத்தினால் கெடுபலன்களை தரும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு லக்னாதிபதி ஆக உள்ள செவ்வாய் பகவான் 6ஆம் அதிபதியாக உள்ளதால் கலப்பு பலன்களே கிடைக்கும். சூரியன் மற்றும் சந்திர திசை நன்மைகளை தரக்கூடிய திசைகளாக இருக்கும். குரு திசை ஆனது ராஜயோக திசையாக இருக்கும்.
தனுசு
தனுசு லக்னம் ஆனது உபய லக்னம் என்பதால் 5ஆம் இடத்திற்கு உரிய செவ்வாய் விரைய ஆதிபத்யத்தை சேர்ந்து தருவார். லக்னாதி குரு கேந்திராதிபத்தியத்தை சேர்த்து செயல் படுத்துவார். சூரிய தசை நன்மைகளை தரும். சனி திசை படிப்பினையும், பொருளாதார வளர்ச்சியையும் படிப்படியான முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும். சந்திரனின் வளர்பிறை மற்றும் தேய்பிறை அடிப்படையில் நன்மைகள் மற்றும் தீமைகளை கலந்தே செய்வார். சுக்கிர மற்றும் புதன் திசைகள் அவ்வளவு நற்பலன்களை தருவது இல்லை.
மகரம்
மகர லக்னத்திற்கு சனி, புதன், சுக்கிரன் மூவரும் நண்பர்கள் அப்படிங்கிற அடிப்படையில் நற்பலன்கள் கிடைக்கும். சனி பகவான் லக்னாதிபதி, தனாதிபதியாக உள்ளார். புதன் 6ஆம் அதிபதியாக செயல்படுவதால் புதன் திசையில் மட்டும் சில நெருடல்கள் இருக்கும். குரு மகா திசையில் சில எதிர்மறையான பலன்களும், சில நேர்மறையான பலன்களும் கிடைக்கும். செவ்வாய் திசை கலப்பு பலன்களை தரும், சூரியன் மற்றும் சந்திர திசைகள் பெரிய நன்மைகளை தருவது இல்லை.
கும்பம்
கும்ப லக்னத்தில் புதன், சுக்கிரன், சனி திசைகள் நன்மைகளை செய்யும் ஆனாலும் சற்று எதிர்மறை பலன்களை இந்த தசைகள் ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் 10ஆம் இட ஆதிபதியம் வருவதால் பாதி நன்மைகளையும் பாதி தீமைகளையும் தருவார். சந்திரன் மற்றும் சூரிய திசைகள் நன்மைகளை தருவது இல்லை, ஆனாலும் குரு திசை நன்மைகளை கொடுக்கும்.
மீனம்
மீன லக்ன ஜாதகத்திற்கு செவ்வாய் பகவான் முழு நற்பலன்களை மட்டுமே தருவார். லக்னாதிபதியான குருபகவானுக்கு ஒரு கேந்திராதிபத்தியம் உள்ளதால் கலப்பு பலன்களை தருவார். இவர்களுக்கு சந்திர திசை அற்புத நன்மைகளை தரும். சூரிய திசையில் நல்ல வேலை, நல்ல கடன், நல்ல போட்டி, உடல்நிலை பாதிக்கப்பட்டு சரியாகுதல் உள்ளிட்ட பலன்களை தருவார். சந்திர திசை நன்மைகளை செய்யும் தன்மைகளை உடையது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.