God Photos : வீட்டில் வைக்கக் கூடாத சாமி படங்கள் இதுதான்.. இதில் கொஞ்சம் கவனமா இருங்க!
வீட்டில் வைக்க கூடாத சாமி படங்கள் குறித்து பார்க்கலாம்.
பூஜை அறையில் எந்த சாமி படங்களை வைக்கக்கூடாது என சில சாஸ்திரங்கள் உள்ளன. அதை முறைப்படி பின்பற்றினால் எப்போதும் நன்மையே நடக்கும்.
சனீஸ்வர பகவானின் படங்கள் மற்றும் விக்கிரகங்களுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்தல் கூடாது.
வீட்டு வாசல்களில் மஹா விஷ்ணு, மஹா லட்சுமி படங்களை தொங்க விட கூடாது.
நவ கிரகங்களின் படங்களை பூஜை அறையில் வைத்து எப்போதும் பூஜை செய்யக் கூடாது.
நடராஜரின் உருவ படத்தை வீட்டில் வைக்கக்கூடாது.
கடவுளின் உருவமானது மிகவும் ஏழ்மையாக இருந்தால் அதாவது மொட்டை அல்லது கோவணம் கட்டிய நிலையில் உள்ள முருக பெருமானின் படத்தை வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது.
கோபமாக இருக்கக் கூடிய காளியின் படத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது. தலைக்கு மேல் வேல் இருக்கும்.
முருகனின் படத்தை பூஜை அறையில் வைக்கக் கூடாது. ருத்ர தாண்டவமாடும் உருவம், கொடூர பார்வை உள்ள சாமி படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
வீட்டில் உடைந்த சிலைகள், சிதைந்த சாமி சிலைகள், கிழிந்த உருவ படங்கள் போன்றவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்யக் கூடாது.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்