Marriage Horoscope: வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி..எதிலும் இணைக்கத்தன்மை! வாழ்க்கையில் சிறந்த ஜோடிகளாக இருக்கும் ராசிகள்-these 5 zodiac couples live very happy and enjoyable life - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marriage Horoscope: வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி..எதிலும் இணைக்கத்தன்மை! வாழ்க்கையில் சிறந்த ஜோடிகளாக இருக்கும் ராசிகள்

Marriage Horoscope: வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி..எதிலும் இணைக்கத்தன்மை! வாழ்க்கையில் சிறந்த ஜோடிகளாக இருக்கும் ராசிகள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 20, 2024 06:01 PM IST

Marriage Horoscope Rasis: வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி திலும் இணைக்கத்தன்மையுடன் வாழ்க்கையில் சிறந்த ஜோடிகளாக இருக்கும் ராசிகள் எவையெல்லாம் என்பதை, எந்தெந்த ராசிகள் இணைந்த ஜோடிகளின் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Marriage Horoscope: வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி..எதிலும் இணைக்கத்தன்மை! வாழ்க்கையில் சிறந்த ஜோடிகளாக இருக்கும் ராசிகள்
Marriage Horoscope: வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி..எதிலும் இணைக்கத்தன்மை! வாழ்க்கையில் சிறந்த ஜோடிகளாக இருக்கும் ராசிகள்

திருமணத்துக்கு முன்பு, தங்களது திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி அனைவரும் நிறைய கனவுகள் காண்பார்கள். நான் திருமணம் செய்து கொள்ளும் பையன் அல்லது பெண் என்னை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பியதைக் கொடுக்க வேண்டும், அவர்களின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். எல்லோரும் அன்புக்காக ஏங்குகிறார்கள். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதே திருமணமான ஒவ்வொரு ஜோடிகளும் ஆசையாக இருந்து வருகிறது.

இந்த இரு ராசிகளுக்கு இணைந்திருக்கும் ஜோடிகள் தங்களது திருமண வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இவர்களின் வாழ்க்கை அமைதியால் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் எந்த ராசிகள் இணைந்த ஜோடிகளின் திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

தனுசு மற்றும் சிம்மம்

தனுசு மற்றும் சிம்மம் ஜோடி காதலில் 100க்கு 90 புள்ளிகளைப் பெறுகிறது. அதாவது, அந்த அளவுக்கு அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி அவர்கள் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மாறாக தீர்வுகளைத் தேடுகிறார்கள். அவர்களின் இணக்கம் எப்போதும் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழும்.

எக்காரணம் கொண்டும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பார்கள். அவர்கள் அனைத்தையும் ஒன்றாக எதிர்கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுகிறார்கள். எந்த முடிவை எடுக்க வேண்டுமோ அதை இரண்டு பேர் பேசி முடிவெடுப்பார்கள். இந்த எல்லா காரணங்களால் அவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

கடகம் மற்றும் மீனம்

கடகம் மற்றும் மீனம் தம்பதிகள் வாழ்க்கையில் நம்பமுடியாத மகிழ்ச்சியை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்மறையாக எடுத்துக்கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம்.

கடகம் மற்றும் மீனம் ஜோடி ஆழமான உறவைக் கொண்டுள்ளது. இந்த ஜோடி காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அவர்களின் உறவு மற்றவர்களுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும். சில விஷயங்களில் தவறு இருந்தாலும் அது உடனடியாக பேசி தீர்த்துக்கொள்வார்கள். பொருத்தமான ஜோடியாக தங்களை எந்த இடத்திலும் நிருபிப்பார்கள்

கும்பம் மற்றும் மேஷம்

இந்த ஜோடி வாழ்க்கையிலும் ஒருவருக்கொருவர், விட்டுக்கொடுக்கும், வளைந்து கொடுக்கும் வாழ்க்கையை வாழ்கிறார்கள். இருவருக்கும் பொருந்தக்கூடிய தன்மை அதிகம். மன்னிக்கும் குணமும் உண்டு. ஒருவரையொருவர் பரஸ்பரம் பாராட்டிக் கொள்வார்கள். எந்த சவாலாக இருந்தாலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். சேர்ந்து போராடுபவர்களாக இருப்பார்கள். மனைவிக்கு ஆதரவாக கணவன், கணவனுக்கு ஆதரவாக மனைவி நிற்பார். இதன் காரணமாக, கும்பம் மற்றும் மேஷம் மகிழ்ச்சியான ஜோடியாக உள்ளது

விருச்சிகம் மற்றும் ரிஷபம்

விருச்சிகம் மற்றும் ரிஷபம் ராசியினர் சிறந்த ஜோடியை இருப்பார்கள். அவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செய்யும் விஷயங்கள் எல்லாவற்றிலும் உற்சாகமும் இருக்கும். இருவருக்கு வெற்றி பெற வேண்டும் என்கிற குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பரஸ்பர இணக்கம் அதிகம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எந்தவொரு விஷயத்தை கலந்து ஆலோசித்து இணைந்து செய்கிறார்கள்

மிதுனம் மற்றும் துலாம்

இந்த இரண்டு ராசிகளுக்கும் இடையே நிறைய பொருத்தம் உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் பல விஷயங்களில் இணைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வேலையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவு கிடைக்கும். எந்த ஒரு வேலையைத் தொடங்கும் முன், ஒன்றாகப் பேசி முடிவெடுப்பார்கள். கணவனின் வேலைக்கு மனைவி உதவுவார். அதே போல கணவனும் மனைவிக்கு உதவுவார். இருவருக்கும் ஒரே எண்ணம். பொருந்தக்கூடிய தன்மையைப் பொறுத்தவரை, மிதுனம் மற்றும் துலாம் ஜோடி சிறந்த ஜோடி என கூறப்படுகிறது

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.

 

Whats_app_banner