Mercury Transit: புதன் பகவானால் ரிஷப ராசி, கன்னி ராசி நேயர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகியிருச்சி!
புதன் பகவானால் பலன்களை பெறப்போகும் 2 ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
நவகிரகங்களில் பேச்சுத் திறமை தகவல் தொடர்பு அறிவு கூர்மை உள்ளிட்டவற்றை கொடுக்கும் காரணியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். 12 ராசிகளுக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அனைத்து காரியங்களையும் புதன் பகவானின் மேற்கொண்டு வருகிறார்.
புதன் பகவான் சிம்ம ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார் விரைவில் அவர் அதிபதியாக விளங்கக்கூடிய கன்னி ராசியில் பெயர்ச்சி அடைகிறார். இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்வோம்.
ரிஷப ராசி
புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைய உள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை புதன் பகவான் செய்து கொடுப்பார். வருமானம் அதிகரிக்கும். பண வரவில் இந்த குறையும் இருக்காது. நிலுவையில் இருந்த கடன் தொகைகள் உங்களைத் தேடி வரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
கன்னி ராசி
உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கக்கூடிய புதன் பகவான். உங்கள் ராசிக்கே பெயர்ச்சி அடைகிறார். புதனின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். நீங்கள் தொடங்கிய வேலைகள் சிறப்பாக நடைபெறும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்காலத்தில் நல்ல நன்மைகள் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பொதுவான கணிப்பில் உள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்