Tirupati Teppotsavam: திருப்பதி கோயிலில் 5 நாட்கள் செம சான்ஸ்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெப்போற்சவம் ஐந்து நாட்கள் நடக்க உள்ளன.
உலகப் பிரசித்தி பெற்ற கோயில்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் ஒன்று. உலக பணக்கார கடவுள்களில் இவரும் ஒருவர். இந்த திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ளது.
இந்த உற்சவ திருவிழா வரும் மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்க உள்ளன. முதல் நாள் நிகழ்ச்சியில் ராமன், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி மூன்று சுற்றுகளாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.
இரண்டாவது நாளான நான்காம் தேதி கிருஷ்ணர், ருக்மணி மூன்று சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சி தர உள்ளனர். மூன்றாவது நாளான ஐந்தாம் தேதி நிகழ்ச்சியில் உற்சவர் மலைப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.
மார்ச் 6ஆம் தேதி அன்று நான்காம் நாள் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் மலையப்ப சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி ஐந்து சுற்றுகள் பவனி வந்து காட்சி தருகிறார். ஐந்தாவது நாளான ஏழாம் தேதியன்று அதேபோல் உற்சவர் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் ஏழு சுற்றுகள் பவனி வந்து தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர்.
தெப்போற்சவத்தை ஒட்டி மார்ச் மூன்றாம் தேதி மூன்றாம் தேதி மற்றும் நான்காம் தேதிகளில் நடக்கவிருந்த சகஸ்ர தீப அலங்கார சேவையும், ஐந்தாம் தேதி மற்றும் ஆறாம் தேதிகளில் நடக்கவிருந்த ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் மார்ச் ஏழாம் தேதி நடக்கவிருந்த ஆர்ஜித பிரம்மோற்சவம் சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தெப்போற்சவம் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடக்கிறது.
டாபிக்ஸ்