தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Temples Luck : எடுத்த காரியத்தில் வெற்றி;மனதில் நிம்மதி;சிம்மம், கடகம், கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்கள்

Temples Luck : எடுத்த காரியத்தில் வெற்றி;மனதில் நிம்மதி;சிம்மம், கடகம், கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்கள்

Kalyani Pandiyan S HT Tamil
Aug 02, 2023 08:38 PM IST

சிம்மம், கடகம், கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்களின் பட்டியல் இங்கே!

சிம்மம், கடகம், கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்கள்!
சிம்மம், கடகம், கன்னி ராசிக்காரர்கள் செல்ல வேண்டிய கோயில்கள்!

அவர்கள் அறிவாளியாக இருப்பார்கள்; அதேபோல கோபக்காரர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு சட்டென்று கோபம் வந்துவிடும். அவர்கள்  கற்கடேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வந்தால், அவர்களின் குணத்துக்கும் அவர்களின் செயலுக்கும் ஏற்ற பலன்கள் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற மனநிலையை கொண்டவர்கள். அவர்களும் அதற்கு ஏற்றார் போல உண்மையாக இருப்பார்கள். ஒரு விஷயத்தில் மிகவும் யோசித்து தான் காலடி எடுத்து வைப்பார்கள். அப்படி அவர்கள் எடுக்கும் முடிவில் எக்காரணம் கொண்டும் தடம் மாற மாட்டார்கள். எடுத்த விஷயத்தில் அவர்கள் வென்றே தீர்வார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் உண்மையை மிகவும் கண்ணும் கருத்துமாக பார்ப்பார்கள். அதனால் அவர்களுடன் நீங்கள் பழகும் பொழுது உண்மையை மட்டும் கொடுத்து விட்டால் போதும். அவர்களை நன்றாக சம்பாதித்துக் கொள்ளலாம். 

சிம்ம ராசிக்காரர்கள் கடலூர் பதஞ்சலி நாதர் கோயிலுக்கு சென்று வருவது சிறந்த பலன்களை கொடுக்கும். அப்படி இல்லையென்றால் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு சென்று வரலாம். 

கன்னி ராசிக்காரர்கள் தன்னை மிகவும் அழகு படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் மிக அழகாக ஆடைகளை உடுத்துவார்கள். பார்த்தீர்கள் என்றால், நிறைய சினிமா நட்சத்திரங்கள் கன்னி ராசிக்காரர்கள் ஆக இருப்பார்கள். காரணம் அவர்களிடம் கலை உணர்வானது அதிகமாக இருக்கும். திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலுக்குச் சென்று வருவது சிறந்த பலன்களைக் கொடுக்கும். 

WhatsApp channel

டாபிக்ஸ்