Tiruvannamalai Pournami Girivalam: பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது?
திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை அந்தக் கோயிலின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற அக்னி தலமாகப் போற்றப்படுவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் இது அக்னி தளமாக விளங்குகிறது. ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறத் தினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
திருவண்ணாமலையைப் பற்றி நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு அண்ணாமலையைக் கிரிவலமாகச் சுற்றி வந்தால் உள்ளமும் உடலும் நலம் பெறும் என்பது அதிகமாகப் பின்பற்றப்படுகிறது.
இந்த தலத்தில் மட்டும் தான் மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். இது கோயிலின் பின்னால் இருக்கும் அண்ணாமலை மலையைப் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்நிலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல சரியான நேரத்தைத் திருவண்ணாமலை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த அக்டோபர் மாதத்திற்கான பௌர்ணமி வரும் அக்டோபர் 7ஆம் தேதி அன்று மாலை 4.44 மணிக்குத் தொடங்கி மறுநாள் அக்டோபர் 8ஆம் தேதி மாலை 4.48 மணிக்கு முடிவடைகிறது எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.