MAGARAM SUKRAN PEYARCHI PALANGAL: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!-sukran peyarchi palangal positive impacts for magaram rasi details about wealth family career development - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Magaram Sukran Peyarchi Palangal: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!

MAGARAM SUKRAN PEYARCHI PALANGAL: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!

Kathiravan V HT Tamil
Aug 24, 2024 09:21 PM IST

மகரம் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் 8ஆம் இடத்தில் இருந்து 9ஆம் இடத்திற்கு இடப்பெயர்சி ஆகிறார். 5 மற்றும் 10ஆம் இடத்திற்கு உரிய சுக்கிர பகவான் நீசம் அடைவது மகரம் ராசிக்கு ராஜ யோகத்தை தரும். இதன் மூலம் வியாபார வளர்ச்சி, உத்யோக மேன்மை, பதவி உயர்வு, அறிவாற்றல் மேம்பாடு உள்ளிட்டவை கிடைக்கும்.

MAGARAM SUKRAN PEYARCHI PALANGAL: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!
MAGARAM SUKRAN PEYARCHI PALANGAL: கன்னியில் நீசம் பெறும் சுக்கிரன்! அம்பானியாக மாறபோகும் மகரம் ராசி!

ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சுக்கிர பகவானின் பெயர்ச்சி 

ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளின் அதிபதியான சுக்கிர பகவான், ஜோதிட கணக்கீடுகளின்படி, சுக்கிரன் சிம்மத்தில் இருந்து கன்னியில் பெயர்ச்சி ஆகி உள்ளார். 

கன்னி ராசியில் சுக்கிர பகவான் நீசம் பெறுகிறார். பொதுவாக ஒரு கிரகம் நீசம் பெற்றால் கெடுபலன்களை தருவது இயல்பு. ஆனால் குரு கன்னி ராசியை பார்ப்பதால், சுக்கிரன் நீச பங்கள் பெறுகிறார். இதன் மூலம் 12 ராசிகளுக்கும் ஏதோ ஒருவிதத்தில் நல்லது நடைபெறும். 

மகரம் ராசிக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள் 

மகரம் ராசிக்கு யோகத்தை தரக்கூடிய சுக்கிர பகவான் 8ஆம் இடத்தில் இருந்து 9ஆம் இடத்திற்கு இடப்பெயர்சி ஆகிறார். 5 மற்றும் 10ஆம் இடத்திற்கு உரிய சுக்கிர பகவான் நீசம் அடைவது மகரம் ராசிக்கு ராஜ யோகத்தை தரும். இதன் மூலம் வியாபார வளர்ச்சி, உத்யோக மேன்மை, பதவி உயர்வு, அறிவாற்றல் மேம்பாடு உள்ளிட்டவை கிடைக்கும். 

தொழில் ரீதியாக நல்ல மாற்றங்கள் உண்டாகும். இழந்த வேலை வாய்ப்பை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகள் வெற்றிகளை தரும். எதிர்பாலினத்தவர் மூலம் உங்கள் மீது படிந்த கறைகள் நீங்கும். 

தந்தை வழியில் நீண்டநாட்களாக இருந்து வந்த மன ஸ்தாபங்கள் நீங்கும். சொத்து பிரச்னைகள் தீரும். 2ஆம் இடத்தில் உள்ள சனியின் பார்வையில் 8ஆம் இடத்தில் சூரியன் உள்ளார். இதனால் அரசு அதிகாரிகள் வகையில் அனுகூலங்கள் கிடைக்கும். அவர்களுடனான பிரச்னைகள் தீரும். 

முன்னோர்கள் ஆசி உங்களுக்கு கிடைக்கும். குழந்தைகளால் மன நிம்மதி ஏற்படும். பணத்தட்டுப்பாடு இருந்தாலும், அக்டோபர் மாதத்திற்கு பிறகு நிலைமை சீராகும். புத்துணர்வும், புதுத்தெளிவும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

நீண்ட நாட்களாக இருந்து வந்த கவலைகள் விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த கவலைகள், தடைகள், சுணக்கங்கள் விலகி நன்மைகள் பிறக்கும். 

உடன் பிறப்புகளுக்காக நீங்கள் செய்த செலவுகள் சந்தோஷத்தை ஏற்படுத்தும். மரியாதை தராமல் இருந்த உடன் பிறப்புகள் உங்கள் வழிக்கு வருவார்கள். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.