6ஆம் இட சுக்கிரனால் உண்டாகும் அதிர்ஷ்டம்! கடகம் ராசிக்கான சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!
கடகம் ராசிக்கு 4ஆம் அதிபதியான சுக்கிரன் 6ஆம் இடத்திற்கு செல்வதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும். வேலை மற்றும் பணியிடங்களில் சிக்கல்கள் உண்டாகும். வீட்டில் விரையங்கள் ஏற்படும்.
நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.
பரிவர்தனை யோகம்
விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.
கடகம் ராசியும் சுக்கிரனும்
கடகம் ராசிக்கு 4ஆம் அதிபதியான சுக்கிரன் 6ஆம் இடத்திற்கு செல்வதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும். வேலை மற்றும் பணியிடங்களில் சிக்கல்கள் உண்டாகும். வீட்டில் விரையங்கள் ஏற்படும். சிலருக்கு வேலை சார்ந்த இடமாற்றம் நடைபெறும். சிலர் பழைய வீடுகளை பழுது நீக்கி புதுப்பீர்கள், வீட்டிற்கு ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இருப்பினும் கடகம் ராசிக்காரர்கள் உடல்நலனை கவனித்துக் கொள்வது நல்லது.
திடீர் யோகமும் நன்மைகளும்!
எதிரிகளால் நன்மைகள் உண்டாகும் காலம் இது. சுக்கிர பகவானின் 12ஆம் பார்வையால் தன வரவு உண்டாகும். சிலருக்கு திடீர் யோகம் உண்டாகும். சுக்கிரன் பூராடம் நட்சத்திரத்தில் அமரும் காலத்தில் வீடு மற்றும் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாமனார் மற்றும் மாமியார் வழியில் நன்மைகள் உண்டாகும். சுக்கிரன் 4ஆம் அதிபதி என்பதால் வண்டி வாகன போக்குவரத்து சார்ந்த தொந்தரவுகள் மற்றும் பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். உயர்கல்வி படிப்பதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.