Sukran Peyarchi 2023: மகரம் ராசிக்கு சுக்கிரன் செய்யப்போகும் சம்பவங்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukran Peyarchi 2023: மகரம் ராசிக்கு சுக்கிரன் செய்யப்போகும் சம்பவங்கள்

Sukran Peyarchi 2023: மகரம் ராசிக்கு சுக்கிரன் செய்யப்போகும் சம்பவங்கள்

Kathiravan V HT Tamil
Jul 11, 2023 03:56 PM IST

“இந்த 34 நாட்களில் நல்ல சந்தரப்பமும், குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண தடைகள் நீங்குதல், தொழில் முன்னேற்றம், வாங்கிய கடனை அடைக்கும் சூழல் உள்ளிட்டவை உண்டாகும்”

சுக்கிரன் 4.7.2023 முதல் 6.8.2023 வரை மிதுனராசியில் சஞ்சாரம் செய்கின்றார்
சுக்கிரன் 4.7.2023 முதல் 6.8.2023 வரை மிதுனராசியில் சஞ்சாரம் செய்கின்றார்

மனித வாழ்வில் சனிப்பெயர்சி கர்மாவுக்கேற்ற பலனையும், ராகு பெயர்ச்சி பல நன்மைகளை கொடுத்து பறிக்கும், குரு பெயர்ச்சி இருக்கும் இடத்தை விட பார்க்கும் பார்வைக்கு வல்மை இருக்கும். ஆனால் சுக்கிர பெயர்ச்சி அழகான இல்லறத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

உத்ராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களை கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியானது கவனமாகாகவும் நிதானமாகவும் இருக்கு பட்சத்தில் இழந்த அனைத்தையும் பெரும் வல்லமை கிடைப்பதாக இருக்கும்.

கடந்த சில நாட்களாக கடும் பாதிப்பை சந்தித்த மகரராசியினர் ஜென்மம் மற்றும் பாத சனியால் சற்று சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மனக்குழப்பம், எதிலும் தடை என்பது பாதசனியால் மகரராசியினர் சந்திக்கும் பாதிப்பாக உள்ளது.

இதற்கிடையில் நல்ல திருமண யோகத்தை சுக்கிரன் தருவார், தொழிலில் முன்னேற்றம், தீமை விளைவிக்கும் எதிரிகள் விலகி செல்லும் நிலை ஆகிய விளைவுகளை சுக்கிரன் ஏற்படுத்துவார்.

இந்த 34 நாட்களில் நல்ல சந்தரப்பமும், குடும்பத்தில் மகிழ்ச்சி, திருமண தடைகள் நீங்குதல், தொழில் முன்னேற்றம், வாங்கிய கடனை அடைக்கும் சூழல் உள்ளிட்டவை உண்டாகும்.

அதே வேளையில் உங்கள் வளர்ச்சியை தடுக்க கூடியவர்கள் உங்கள் கூடவே இருப்பார்கள்.

ஆலயம் கட்டுவது, ஆலய தரிசனம் செய்வது, புண்ணிய தலங்களுக்கு செல்வது, புகழ்பெற்ற மனிதர்களோடு தொடர்பு உள்ளிட்டவை சுக்கிரனால் உண்டாகும்.

அருகம்புல் எடுத்துக் கொண்டு ஓம் கம் கணபதியே நமஹ என்ற கணபதி மந்திரத்தை சொல்லி வர பிரச்னைகள் எளிதில் தீரும்.

மாதத்தில் ஒரு முறை சோளிங்கர் - திருத்தணிக்கு அருகே உள்ள நத்தம் என்ற ஊரில் உள்ள மாயனேஸ்வரர் உடனுறை சிவகாமி ஆலையத்தில் உள்ள ஈசனை வழிபட்டால் சுக்கிரன் துணை இருந்து அற்புத வாழ்வை அருளுவார்.

Whats_app_banner

டாபிக்ஸ்