தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Poorattadhi: திடீர் அதிர்ஷ்டம், புகழ், செல்வாக்கு உயரும்!பூரட்டாதி நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Poorattadhi: திடீர் அதிர்ஷ்டம், புகழ், செல்வாக்கு உயரும்!பூரட்டாதி நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 15, 2024 09:30 PM IST

புரட்டாதி நட்சத்திரம் முதல் மூன்று பாதங்கள் கும்பம் ராசியிலும், நான்காம் பாதம் மீனம் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். உங்களது புகழ், செல்வாக்கு உயரும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

பூரட்டாதி நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்
பூரட்டாதி நட்சத்தினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்

பூரட்டாதி நட்சத்திரம் கும்பம், மீனம் என இரண்டு ராசியில் இடம்பிடித்துள்ளது. முதல் மூன்று பாதங்கள் கும்பம் ராசியிலும், நான்காம் பாதம் மீனம் ராசியிலும் இருக்கிறது.

குரு பெயர்ச்சியால் பூரட்டாதி நட்சத்தினருக்கான பொதுப்பலன்கள்

புரட்டாதி நட்சத்திரத்தினர் குருவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பீர்கள். நீண்ட கால கனவுகள் நிறைவேறும் காலமாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும். வீடு, வாகனம் சேர்க்கைகான வாய்ப்புகள் அமையும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நம்பிக்கைக்கு உரியவரிடம் நன்மைகள் பெறுவீர்கள்

தேவையில்லாத குழப்பங்களை விட்டு விலகுங்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரை ஏற்றமாக இருக்கும். உறவினர்களால் இருந்து வந்த மனகுழப்பங்கள் நீங்கும்.

உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு போதிய வருமானம் உண்டு. மெக்கானிக்கல், சிவில், ஆட்டோமொபைல் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம் உள்ளது. பெரிய அளவில் முதலீடுகளை செய்வதை தவிருங்கள்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். அதற்கான செலவுகள் செய்வீர்கள். கேளிக்கைகளில் நாட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளை பிரிந்து வாழும் சூழ்நிலை உருவாகலாம். தொழிலை பொறுத்தவரை நன்மை பயக்கும்.

புகழ், செல்வாக்கில், அந்தஸ்தில் உயர்வீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன் அமையும். நண்பர்கள், உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல பிரபலம் அடைவார்கள். சமூகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுவீர்கள். வேலையில் எந்த பிரச்னை இல்லாவிட்டாலும் திருப்தியற்ற மனநிலை உருவாகும். எண்ணத்தை மாற்றி கவனமாக இருந்தால் ஏற்றமும், முன்னேற்றமும் அமையும்

கும்பம் ராசியில் இருக்கும் புரட்டாதி நட்சத்தினருக்கான தசாபுத்தி பலன்கள்

சனி திசையில் இருப்பவர்கள் (30 வயது வரை) மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தோடுவோர் முயற்சி செய்தால் மட்டுமே எதிர்பார்த்த இடத்தில் வாய்ப்புகள் அமையும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு தடைக்கு பின் வரன் அமையும். சுய தொழில் செய்பவர்களுக்கு சற்று கடினமான காலகட்டமாக இருக்கும்.

புதன் திசையில் இருக்கும் (47 வயது வரை) நபர்களுக்கு நல்ல காலமாக உள்ளது. வாகன சேர்க்கை உண்டு. சொத்து வாங்கும் யோகமும், பணவரவையும் கொடுக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படலாம். தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் விலகும். உறவுகள் ரீதியாக இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். மேன்மையான காலகட்டமாக இருக்கும். சுப நிகழ்வுகள் நடக்கும்

கேது திசையில் இருப்பவர்கள் (54 வயது வரை) நல்ல மாற்றத்தை பெறுவீர்கள். புதன் திசையில் இருப்பவர்கள் பெறும் அனைத்து நற்பலன்களையும் கேது திசையில் இருப்பவர்களும் பெறுவார்கள்.

சுக்கிர திசையில் இருப்பவர்கள் (74 வயது வரை) பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். சொத்து சேர்க்கையானது இருக்கும். தொழில் ரீதியாக மாற்றங்கள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டு.வேண்டிய உதவிகளை நெருக்கமானவர்களுக்கு செய்வீர்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்

சூரிய திசையில் இருப்பவர்கள் (80 வயது வரை) உடல் நிலை பாதிப்புகள் ஏற்படலாம். மனஅழுத்தம் ஏற்படலாம். பயணங்களை தவிருங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். வருமானம் போதிய அளவில் இருக்கும்.

மீனம் ராசியில் இருக்கும் புரட்டாதி நட்சத்தினருக்கான தசாபுத்தி பலன்கள்

சனி திசையில் இருப்பவர்கள் (21 வயது வரை) மாணவர்களுக்கு படிப்பில் எந்த பாதிப்பும் இருக்காது. படிப்பு ரீதியாக செலவுகள் ஏற்படும். புதன் திசையில் இருப்பவர்கள் (38 வயது வரை) வேலை ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்புகள் அமையலாம். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் உறுதியாக அமையும். திருமணம் ஆன தம்பதிகளுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் அகலும். நண்பர்களை வழியில் உதவிகள் கிடைக்கும். சுய தொழிலில் வளர்ச்சிகள் உண்டு. அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கும்.

கேது திசையில் இருப்பவர்கள் (45 வயது வரை) பிரச்னைகள் நீங்கி நல்ல பலன்களை பெறுவீர்கள். குலதெய்வத்தின் ஆசி இருக்கும். வேலையில் இருந்து வந்த நெருக்கடிகள் அகலும்

சுக்கிர திசையில் இருப்பவர்கள் (65 வயது வரை) அவயோகமாக இருப்பதால் பெரிய அளவில் நன்மைகள் இருக்காது. தொழிலில் மாற்றங்கள் ஏற்படலாம். எண்ணங்கள் ஈடேறும். திருமண உறவில் இருந்து வந்த மனஉளைச்சல்கள் அகலும். சுப செலவுகள் ஏற்படும்.

சூரிய திசையில் இருப்பவர்கள் (71 வயது வரை) வளர்ச்சி உண்டு. உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டும். தூக்கமின்மை பிரச்னைகள் ஏற்படலாம். சந்திர திசையில் இருப்பவர்களுக்கு (81 வயது வரை) விரயங்கள் ஏற்படும். உறவினர்கள் வழியில் மனநெருக்கடிகள் ஏற்படும். மருத்துவ செலவுகள் உண்டு. பிள்ளைகள் நற்பலன்களை பெறுவார்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்