Navavarana Pooja: நவாவரண பூஜை மகிமை தெரியுமா? - வாங்க பாக்கலாம்!
பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிகைக்கு ஆராதனைகள் நடைபெறுவதே நவாவரண பூஜை ஆகும்.
காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த கோயிலிலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறார். காமாட்சி அம்மனுடைய இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். இதனால் தான் பௌர்ணமி நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இந்த கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.
சாந்த சொரூபமாகக் காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இந்த கோயிலில் காரணம் எனப்படும் துலாஹாசம், பிம்பம் எனப்படும் காமாட்சி, சூட்சமம் எனப்படும் ஸ்ரீ சக்கரமாக வீற்றிருக்கிறார். அவர் வீட்டிற்குக் கூடிய இடம் காயத்ரி மண்டபம் என அழைக்கப்படுகிறது.
இந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவமிருந்து காமாட்சி அம்மனுடைய அருளைப் பெற்றுள்ளார்கள். இந்த மண்டப பகுதியிலிருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதைப் பார்க்க முடியும். காமாட்சி அன்னைக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும் பொழுது இந்த ஸ்ரீ சக்கரத்துக்குத் தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும்.
இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீ ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இந்த கோயிலில் ஸ்ரீ வித்யா உபாசனை வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீ சக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அது சக்தி வாய்ந்த இந்த ஸ்ரீ சக்கரத்தைச் சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீ சக்கரம் 9 ஆபரணங்கள் கொண்டது. ஆபரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று எனப் பொருள்.
ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆபரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆபரண தேவதைகள், பரிவாரம் தரக்கூடிய சக்தி தேவதைகள் சித்தி தரக்கூடிய அணிமா, லஹிமா, மகிமா, ஆகிய 9 சக்தி தேவதைகள் இருக்கிறார்கள். பௌர்ணமி தினத்தன்று இந்த ஒன்பது நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமா சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.
இந்த ஒன்பது சுட்டுக்களுக்கும் பூஜை நடக்கும்போது சங்கு தீர்த்தமும் இடம்பெற்றிருக்கும். ஒன்பது ஆபரணத்துக்கும் பூஜையில் முடிந்த பிறகு பிந்துஸ்தானத்தில் வீற்றிருக்கக்கூடிய காமாட்சி அம்பிகைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாபரண பூஜை.
இந்த பூஜை மிக மிகச் சிறப்பானது. மிக விசேஷமான பலன்களைத் தரக்கூடியது. நல்ல உபதேசம் பெற்றவர்கள் தான் இந்த பூஜையை செய்யும். நவாவரண பூஜையின் ஏழை எளியவர்களும் சாதாரண மக்களும் பெறவேண்டும் இந்த நோக்கத்தில் தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீ சக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த ஸ்ரீ சக்கரத்தைச் சாதாரணமாகத் தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். இதையும் தாண்டி புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ சக்கரத்தின் ஒன்பது சுற்றுகளையும் உள்ள தேவதைகளுக்குப் பூஜைகள் நடப்பதைக் கண்டு தரிசனம் செய்தால் கோடி பலன்கள் நாடிவரும்.
ஸ்ரீ சக்கரத்தைச் சுற்றி இருக்கக்கூடிய கவசங்களில் அஷ்டலட்சுமிகள் வீட்டிலிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீ சக்கரத்திலிருந்து கிடைக்கக்கூடிய குங்குமத்திற்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தைப் பெற்ற பிறகு படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் பெற்றுவிட்டால் அளவிடாத பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.